சுறுசுறுப்புடன் இயங்கி வெற்றிபெறும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், சனி, ராகு நல்ல பலன் தரும் வகையில் செயல்படுகின்றனர். வாக்கு ஸ்தானத்தில் உச்சபலம் பெற்றுள்ள செவ்வாய் உங்களை அதிகம் பேசவைப்பார். நிதானித்து பேசினால் பிரச்னை இராது. தம்பி, தங்கை அன்பு கொள்வர். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணி செய்வீர்கள். புத்திரர்கள் சில முக்கிய பொருட்களை தொலைத்துவிடநேரலாம். அறிவுரை சொல்வது நலம். உடல்நலம் சிறப்பாக அமையும். நண்பர்களிடம் முன்பு கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டு குடும்பநலம் பேணிகாத்திடுவர். கூடுதல் சொத்து வாங்க அனுகூல சூழ்நிலை உருவாகும். தந்தைவழி உறவினர்களிடம் அவப்பெயர் வராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது. தொழிலதிபர்கள் சொத்தின் பேரில் கடன் பெற்றாலும் நல்ல லாபம் பெறுவர். அபிவிருத்தி பணிகள் திட்டமிட்ட வகையில் சிறப்பாக நிறைவேறும். வியாபாரிகள் விற்பனை இலக்கில் சாதனை புரிய முழு கவனத்துடன் செயல்படுவர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சக பணியாளர்களிடம் தேவையற்ற விஷயங்கள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. பணிகள்சற்று இழுத்தடிக்கும்.குடும்பப் பெண்கள் சில மாற்றங்களை பின்பற்றி வாழ்வு சிறக்க பாடுபடுவர். கணவரின் பாசம், பணஉதவி திருப்திகரமாக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச் சுமையை எதிர் கொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்த தனிக்கவனம் கொள்வர். கூடுதல் ஆர்டர் கிடைப்பதால் வருமானம் கூடும். அரசியல்வாதிகள் விலகிச்சென்ற ஆதரவாளர்களை தன்பக்கம் திரும்ப கொண்டுவருவதில் நன்மை அடைவர். விவசாயிகளுக்கு இடுபொருள் கிடைப்பதில் இருந்த தாமதம் விலகும். கால்நடை வளர்ப்பில் திருப்திகர பணவரவு உண்டு. மாணவர்கள் கவனமுடன் படித்து தேர்ச்சி நிலையில் முன்னேற்றம் அடைவர்.
பரிகாரம்: அம்மன் வழிபாட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உஷார் நாள்: 30.12.12 அதிகாலை 1.14 முதல் 1.1.13 காலை 10.21 வரை வெற்றி நாள்: டிசம்பர் 20, 22 நிறம்: சந்தனம், நீலம் எண்: 3, 8
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »