தன்னைப்போல பிறர் நலமும் பேணுகின்ற மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், குருபகவான் நல்ல பலன் தருகிற வகையில் உள்ளனர். ராசியில் உச்சம் பெற்றுள்ள செவ்வாய் மனதில் அதிக எதிர்பார்ப்புக்களை உருவாக்குவார். வாழ்வில் பெற வேண்டிய நியாயமான தேவைகளை நல்லவர்களின் உதவியுடன் நிறைவேற்றிக் கொள்வீர்கள். சமூகத்தில் பெற்ற புகழைப் பாதுகாப்பதில் தகுந்த கவனம் கொள்வீர்கள். தம்பி, தங்கையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் அறிமுகம், நம்பகத்தன்மை குறைவான எவருக்கும் இடம்தர வேண்டாம். புத்திரர்கள் படிப்பு, செயலில் தம்மை சிறப்பாக வடிவமைத்துக் கொள்வர். உடல்நலம் சீராக இருக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த மனக்குறையை மாற்றும் வகையில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும்.தொழிலதிபர்கள் இடையூறுகளைச் சரிசெய்து உற்பத்தியை அதிகரிப்பதில் தகுந்த கவனம் கொள்வர். லாபம் குறையும். வியாபாரிகள் அதிகரித்துள்ள போட்டியைச் சமாளிப்பதில் புதிய யுக்தியை பின்பற்றுவர். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே பிரச்னை வராமல் தவிர்க்கலாம். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். உறவுப்பெண்களிடம் இருந்த கருத்து வேற்றுமை சரியாகும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை தாமதமாகும். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை உயர்த்துவதில் ஆர்வத்துடன் செயல்படுவர். விற்பனை சீராகி ஓரளவு லாபம் வரும். அரசியல்வாதிகள் அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனை பெற்று திட்டங்களை நிறை வேற்றுவர். விவசாயிகள் திருப்திகரமான பணவரவு பெறுவர். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தகுந்த கவனமும் விளையாட்டு பயிற்சியில் பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்ற வேண்டும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் இடர் விலகி நன்மை ஏற்படும். உஷார் நாள்: 1.1.13 காலை 10.21 முதல் 3.1.13 மாலை 4.57 வரை. வெற்றி நாள்: டிசம்பர் 18, 19 நிறம்: ஊதா, ஆரஞ்ச் எண்: 6,7.
மேலும்
ஆடி ராசி பலன் (17.7.2025 முதல் 16.8.2025 வரை) »