பழநி வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயில்களில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 04:04
பழநி; பழநி, கிரிவீதியில் உள்ள வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயில்களில் வருடாபிஷேகம் நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரிய கடைவீதி கோசல விநாயகர் கோயில், அபரஞ்சி விநாயகர் கோயில், உத்திர விநாயகர் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோவில் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அடிவாரம் கிரிவீதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி கோயில், வனதுர்க்கை அம்மன் கோயில்களில் வளர அபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின் உட்சிகால பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.