பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
04:04
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானத்திற்கு இரண்டு மொபைல் துரித உணவு வேன்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இன்று வெள்ளிக்கிழமை, பெங்களூருவில் உள்ள M.S. ராமையா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த M.S. சுந்தர் ராம் என்ற பக்தர், பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க ரூ.45 லட்சம் மதிப்புள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டு படா தோஸ்த் மொபைல் துரித உணவு வேன்களை திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினார். முதலில், இந்த வாகனத்திற்கான சிறப்பு பூஜைகளை கோவிலில் அர்ச்சகர்கள் செய்தனர். பின்னர், வாகன சாவியை தேவஸ்தான கூடுதல் அலுவலர் வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைத்தனர்.
இத குறித்து தேவஸ்தான அலுவலர் கூறியதாவது; இந்த அதிநவீன வாகனங்கள் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பக்தர்கள் நெரிசல் ஏற்படும் போதும் வரிசையில் பிரசாதம் மற்றும் குடிநீரை விநியோகிக்க இவை பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனங்கள் மூலம் ஒரே நேரத்தில் 03 ஆயிரம் பேருக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்க முடியும் என்று அவர் கூறினார். இன்று முதல் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்தது. நன்கொடையாளர்கள் இதுவரை இரண்டு வாகனங்களை நன்கொடையாக அளித்துள்ளதாகவும், மற்றொரு வாகனம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேவஸ்தான கூடுதல் அலுவலர் நன்கொடையாளர்களை வாழ்த்தினார்.