பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
01:04
கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்.. நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் யோகமான மாதமாகும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் நெருக்கடிகள் விலகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் நீங்கும். உங்களுக்கெதிராக செயல்பட்டவர்கள் சமாதானம் பேசும் நிலை உருவாகும். இழுபறியாக இந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் யோகமான மாதமாக இருக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ள முடியும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பொன், பொருள் சேரும். வரவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஏப்.30 வரை புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து வாங்குவது, இடம் வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கோயில் வழிபாடு செய்வதற்குரிய வாய்ப்பு உருவாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும்.
சந்திராஷ்டமம்: மே 8
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,18,26,27,மே9
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை உண்டாகும்.
சதயம்: நினைத்ததை சாதித்திட வேண்டும் என்ற மனம் கொண்ட உங்களுக்கு சித்திரை முன்னேற்றமான மாதமாகும். சூரியன் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வைகள் மே11 வரை 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஏப்.26 முதல் கேது சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அஷ்டம ஸ்தானத்தில் இருந்து அவரால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல் பிரச்னைகள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ஆற்றலை அதிகரிப்பார். விவசாயிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், எக்ஸ்போர்ட், ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்கள் மேற்கல்வியை தேர்வு செய்யும் போது ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: மே 9.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,22,26,31, மே4,8,13
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: புத்தி சாதுரியத்துடன் செயல்படும் உங்களுக்கு சித்திரை நன்மையான மாதமாகும். குருபகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் உங்கள் செல்வாக்கை உயர்த்தும். உடல் சங்கடத்தைப் போக்கும். இதுவரை சந்தித்த நெருக்கடிகளில் இருந்து மாற்றம் ஏற்படும். உங்களை ஏளனமாக பார்த்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் நிலை உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் மறையும். ஆறாம் இடத்து செவ்வாய் வம்பு வழக்குகளை இல்லாமல் செய்வார். உங்கள் செல்வாக்கை மேலும் உயர்த்துவார். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகு ஏப். 26 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கப் போவதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு இது முன்னேற்றமான மாதமாகும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்யலாம். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும் மாணவர்கள் பெரியோரின் ஆலோசனைப்படி கல்லுாரியை தேர்வு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: மே10
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30,மே3,8,12
பரிகாரம்: சனிக்கிழமையில் நவக்கிரத்தை வழிபட நன்மை உண்டாகும்.