Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநோதம், வித்தியாசம் நிறைந்த ... பிரதோஷம்; சிவனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும்! பிரதோஷம்; சிவனை வழிபட துன்பம் ...
முதல் பக்கம் » துளிகள்
தாய் தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்ட கோவில்
எழுத்தின் அளவு:
தாய் தரிசனம் செய்வதற்காக கட்டப்பட்ட கோவில்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2025
10:04

பெங்களூரு நகரில் இருந்து 47 கி.மீ., தொலைவில், ராம்நகர் மாவட்டம் மாகடியில் ஸ்ரீ பிரசன்ன சோமேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மாகடி டவுனில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. 1512ல் நாடபிரபு கெம்பே கவுடாவால் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு தகவலின்படி, கெம்பே கவுடாவின் பேரன் மும்மடி கெம்ப வீரப்பா கவுடாவின் தாய், காசிக்கு செல்ல ஆசைப்பட்டார். ஆனால், முதுமை காரணமாக அவரால் செல்ல முடியவில்லை என்று மகனிடம் வருத்தப்பட்டார்.இதையடுத்து, மாகடியில் சிவன் கோவில் கட்ட முடிவு செய்தார். நகரின் புறப்பகுதியில், ஸ்ரீ பிரசன்ன சோமேஸ்வரா கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது.

நந்தி கோபுரம்; கோவிலின் ராஜகோபுரம் நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள், உங்களை வரவேற்பர். கோவிலில் கருவறையில், சோமேஸ்வரர் பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். அதுபோன்று சிவனின் வாகனமான நந்தி தேவனுக்கு, கோவிலில் இருந்து சிறிது தொலைவில், ‘நந்தி கோபுரம்’ அமைக்கப்பட்டு உள்ளது.

‘பிரம்மரம்பிகா’ என்று அழைக்கப்படும் பார்வதிக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரில், சத்யநாராயணா என்ற பெயரில் விஷ்ணுவுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டு உள்ளது.

யாகம், ஹோமம் நடத்துவதற்காக, கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு துாண்களுடன் கூடிய சிறிய கோபுரங்கள் கட்டப்பட்டு உள்ளன.



வில்வ மரம்

இக்கோவிலை, நீதி வழங்கும் இடமாகவும் கெம்பே கவுடா கட்டி உள்ளார். இங்குள்ள கல் மண்டபத்தில் குற்றம் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி தண்டனை அறிவிப்பார். கோவிலில் கெம்பே கவுடா நட்டு வைத்த வில்வ மரம் இன்னமும் வளர்ந்து செழித்துள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திருவிழா நாட்களில், காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். அருகிலுள்ள மற்ற கோவில்கள்:மாகடி ரங்கநாத சுவாமி கோவில், மாகடி கோட்டை, மனசனபெலே அணை, சாவனதுர்கா மலை அமைந்துள்ளன.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், மாகடி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.பஸ்சில் செல்வோர், மாகடி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar