ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் செல்லும் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2025 05:04
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடக்கும் தேரோட்ட திருவிழாவின் போது பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு, கிளி மற்றும் மங்கலப் பொருட்கள் இன்று ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டது.
ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ரெங்கநாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும். இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி நட்சத்திரம் ஏப்.,26ல் வருகிறது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது. அந்த தேரோட்டத்தின் போது ரெங்கநாதர், ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று நடந்தது. அப்போது ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.