பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
புனர்பூசம் 4 ம் பாதம்
தெளிந்த ஞானமும், செல்வாக்கும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். குரு பகவான் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வையால் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட தடை, உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். ஆரோக்யமாக செயல்படத் தொடங்குவீர். ஜூன் 2 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் பாதிப்பு ஏற்படும் என பயப்பட வேண்டாம். குரு பகவானின் பார்வையால் தலைக்கு வருவதெல்லாம் தலைப்பாகையோடு போய்விடும். பெரிய அளவில் நீங்கள் பயந்திருந்த விஷயம் காணாமல் போகும். எந்த விதமான நெருக்கடியும் உங்களுக்கு ஏற்படாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே 20.
அதிர்ஷட நாள்: மே 21, 29, 30. ஜூன் 2, 3, 11, 12.
பரிகாரம்: சுந்தர மகாலிங்கத்தை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
பூசம்
எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவானும், ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒருவித பயம் இருக்கும். அஷ்டம சனி என்ற பயமும், ராகு என்ன செய்வாரோ என்ற பயமும் உண்டாகி இருக்கும். அஷ்டம சனியையும் ராகுவையும் குரு பகவான் பார்ப்பதால் இக்காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் போகும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பட்ட அவமானம் நீங்கும். தடைபட்ட வேலைகள் நடைபெற ஆரம்பிக்கும். உடலிலும் மனதிலும் இருந்த பாதிப்பு பயம் நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். உங்களுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் பலவீனம் அடைவர். வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற முயற்சி வெற்றியாகும். கடன் அடைபடும். அதற்கேற்ற வகையில் வருமானமும் இருக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வார்த்தைகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படும். பண விவகாரத்தில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி இருவருவரும் இக்காலத்தில் முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
சந்திராஷ்டமம்: மே 20, 21.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 26, 29. ஜூன் 2, 8, 11.
பரிகாரம்: சங்கர ராமேஸ்வரரை வழிபட சங்கடம் போகும்.
ஆயில்யம்
புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். உங்கள் தன, குடும்ப, வாக்காதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சப்பதால் வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களிலும் இப்போது லாபத்தை எதிர்பார்க்க முடியும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். அரசு வழி முயற்சிகளில் லாபம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். மே 31 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வீடு வாங்குவீர். ஜூன் 2 வரை புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால், புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பழைய கடன்கள் அடைபடுவதுடன் சேமிப்பு உயரும்.
சந்திராஷ்டமம்: மே 21, 22.
அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.
பரிகாரம்: கண்ணுடைய நாயகியை வழிபட்டுவர நினைப்பது நடக்கும்.