பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்
சாமர்த்தியமாக சாதனைகள் புரிந்துவரும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். இதுவரை உடல்நிலையில் இருந்த சங்கடம், உத்யோகத்தில் தோன்றிய பிரச்னை, குடும்பத்தில் இருந்த நெருக்கடி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஜூன் 8 முதல் உங்கள் லாபாதிபதி செவ்வாயும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேரும். நினைத்த வேலைகள் நடக்கும். ஜூன் 2 முதல் புதன் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் ஒரு சிலருக்கு திடீர் செலவு ஏற்படும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை, வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஆசிரியர்களின் அறிவுரையால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே 17, 18. ஜூன் 14.
அதிர்ஷ்ட நாள்: மே 23, 27. ஜூன் 5, 9.
பரிகாரம்: வைகுண்ட பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.
திருவாதிரை
நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுடன் இணைந்துள்ள ராகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சனி பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன், அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய சொத்து சேரும். நேற்று தடைபட்டு வந்த வேலை நடக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வம்பு வழக்குகளால் அவதிப்பட்டு வந்த நிலைமாறும். உங்களை எதிர்த்தவர்களே உங்களிடம் வந்து சரண் அடைவார்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். தாய்வழி உறவுகள் மீண்டும் உங்களைத் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவர். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மூன்றாமிடம் பலமடைவதால் அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் பலம் கூடும். வெளிநாட்டு தொடர்பு சாதகமாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வார்கள்.
சந்திராஷ்டமம்: மே 18.
அதிர்ஷ்ட நாள்: மே 22, 23, 31. ஜூன் 4, 5, 13, 14.
பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட சங்கடம் நீங்கும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
புத்தி சாதுரியத்துடன் அறிவாற்றலும் கொண்டு செயல்படும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும், வேலையின் காரணமாகவோ, தொழிலின் காரணமாகவோ குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை சிலருக்கு உருவாகும். இக்காலத்தில்தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த ஒவ்வொன்றும் நடக்கும். அதற்கு காரணம் குருபகவானின் பார்வை தான். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். சொத்துப் பிரச்னையில் சுமூகமான நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உயர்கல்வி கனவு நனவாகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் உண்டாகும். பொருளாதாரவசதி அதிகரிக்கும். பெரிய மனிதருடைய ஆதரவு கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்து உயரும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் உங்கள் நிலையை மேலும் உயர்த்துவர். குடும்பத்திலும் தொழிலிலும் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த பிரச்னை நீங்கும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். குழந்தை பாக்யத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
சந்திராஷ்டமம்: மே 19.
அதிர்ஷ்ட நாள்: மே 21, 23, 30. ஜூன் 3, 5, 12, 14.
பரிகாரம்: பிரம்மபுரீஸ்வரரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.