பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
மகம்
மனதில் நினைத்ததை நடத்தி முடித்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். ராசிக்குள் ஞானமோட்சக் காரகன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் இந்த மாதத்தில் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். ராசிநாதன் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை எல்லாம் வெற்றியாகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு வேலை நியமன உத்தரவு கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜூன் 8 வரை செவ்வாய் 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அங்கு அவர் நீச்சம் அடைந்திருப்பதால் விரயச்செலவுகளும், வீண் அலைச்சலும் கட்டுப்படும்.
சந்திராஷ்டமம்: மே 22.
அதிர்ஷ்ட நாள்: மே 16, 19, 25, 28. ஜூன் 1, 7, 10.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.
பூரம்
எதிலும் முதல் இடத்தை நோக்கி நடை போட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் ராசிநாதன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் நட்சத்திரநாதன் சுக்கிரனின் சஞ்சாரமும் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் இந்த மாதத்தை உங்களுக்கு மிக யோகமான மாதம். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் இந்த நேரத்தில் உங்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். வருமானத்தை தடையில்லாமல் வழங்கும். செல்வாக்கை உயர்த்தும். தடைபட்ட வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். வியாபாரம் தொழிலில் லாபம் கூடும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணம் வரையிலும் செல்லும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அதற்காக எதிர்பார்த்த அனுமதியும் கிடைக்கும். புத பகவானின் சஞ்சாரம் மே 16 முதல் சாதகமாக இருப்பதால் உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலை முன்னேற்றம் அடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலுடன் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடித்து சாதனை புரிவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உழைப்பாளர்கள் நிலை உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஏழாமிட சனி, ராகுவால் உங்களுக்கு உண்டாகும் பாதகப் பலன் குருப்பார்வையால் விலகும்.
சந்திராஷ்டமம்: மே 23.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 1, 6, 10.
பரிகாரம்: திருவல்லீசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்:
வாழ்வில் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்தாலும், ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் வேலைகள் எல்லாம் நினைத்தபடி நடக்கும். இதுவரையில் இருந்த தடை ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். தொண்டர்கள் பலம் கூடும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வியாபாரத்திலும் தொழிலிலும் லாபத்தை உண்டாக்குவார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அவருடைய பார்வைகளாலும் உங்கள் வாழ்வை வளமாக்குவார். குரு பார்க்கும் இடமெல்லாம் சுபத்துவம் அடையும் என்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் முடிவிற்கு வந்து ஒற்றுமையான நிலை உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கூட்டுத்தொழிலில் லாபம் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர். ஏழாம் இடத்தில் சஞ்சரித்து சங்கடங்களை வழங்கி வரும் சனி, ராகுவையும் குரு பகவான் பார்ப்பதால் அவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம், சந்தோஷம் என உங்கள் வாழ்க்கை வளமாகும். புத பகவானும் மே மாதம் 16 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வாகனம் என்ற கனவுகள் நனவாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில சுப காரியம் நடக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: மே 24.
அதிர்ஷ்ட நாள்: மே 19, 28. ஜூன் 1, 10.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.