பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
அவிட்டம் 3, 4 ம் பாதம்
எதிலும் துணிச்சலுடனும் தைரியமாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். ஜென்ம ராசிக்குள் ராகு, சனி சஞ்சரித்து மனதில் சலனங்களையும், ஆசைகளையும் உண்டாக்கும் நிலையில், குரு பகவான் 5 ம் இடத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். இதுநாள்வரை ஏதோ ஒரு காரணத்தால் அமைதியாக இருந்து வந்தவர்கள் இனி வேகமாக செயல்படத் தொடங்குவீர். மீண்டும் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனக் குழப்பம் விலகும். 9 ம் இடத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் கோயில் வழிபாடுகளை மேற்கொள்வீர். பெரிய மனிதர்கள் துணை உண்டாகும். 11 ம் இடத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் புதிய உறவு உண்டாகும். இந்த நேரத்தில் ஜூன் 8 வரை நட்சத்திராதிபதி 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவர் நீச்சம் அடைந்திருப்பதால் அவரால் உண்டாகும் பலன்கள் இக்காலத்தில் கிடைக்காமல் போகும். மே 16 ம் தேதி முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மீண்டும் உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.
பரிகாரம்: குருவை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சதயம்
முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் ஆசைகளை அதிகரிப்பார். குறுக்கு வழியில் செல்ல வைப்பார். கேது நட்புகளிடையே விரிசலை ஏற்படுத்துவார். கணவன் மனைவி ஒற்றுமையில் இடைவெளியை உண்டாக்குவார். வாழ்க்கைத் துணையின் ஆரோக்யத்தில் பாதிப்பை தோற்றுவிப்பார். இந்த நேரத்தில் ஜூன் 8 முதல் செவ்வாயும் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களின் கவனம் வேண்டும். என்ன வந்தாலும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்ற நிலை உங்களுக்கு இருக்கும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வைகளால் ஜென்ம ராகு, சனியினால் ஏற்படும் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். உங்கள் செல்வாக்கு உயரும். நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். தள்ளிப்போன முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். சொத்து சுகம், வண்டி வாகனம் என்ற கனவு நனவாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். மே 16 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். அடிப்படை வசதிகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிக பணியாளர்கள் சிலருக்கு வேலை நிரந்தரமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 5.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 22, 26, 31. ஜூன் 4, 8, 13.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்
கால நிலையறிந்து செயல்பட்டு வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடம் இல்லாமல் போகும். குரு பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். நேற்றைய கனவுகள் நனவாகும். தடைபட்டு வந்த முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். இத்தனை நாளும் அமைதி காத்து வந்த நீங்கள் இனி வேகமாக செயல்படத் தொடங்குவீர். மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வேலை பளு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் புதிய நண்பர்களிடம் கவனமாக இருப்பதும் நல்லது. மே 16 முதல் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வீடு வாங்கு முயற்சி வெற்றியாகும். தேவைக்கேற்ற வருமானம் வரும். பொன் பொருள் சேரும். சங்கடம் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 6.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.
பரிகாரம்: திருவல்லீசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.