பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
பூரட்டாதி 4 ம் பாதம்
தெளிந்த ஞானத்துடன் மற்றவருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலை நடக்கும். குடும்பம், தொழில், உத்யோகத்தில் இருந்த சங்கடம் விலகும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றி ஆக்குவார். உங்கள் உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். விரய ஸ்தானத்தில் ராகுவும் சனியும் சஞ்சரித்தாலும் குரு பகவானின் பார்வையால் சுப விரயங்கள் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜூன் 8 முதல் செவ்வாய் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். இருந்தாலும், நண்பர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 6.
அதிர்ஷ்ட நாள்: மே 21, 30. ஜூன் 3, 12.
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி
நினைத்ததை உடனே சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி உங்களை விட்டு விலகும். வாழ்வில் புதிய பாதை தெரியும். உங்களுக்கேற்பட்ட அவமானம், குடும்பத்தில் இருந்த பிரச்னை எல்லாம் இனி இல்லாமல் போகும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செயல்களில் தெளிவை உண்டாக்குவார். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்களை அறிந்து கொண்டு அவர்களை விட்டு விலகுவீர்கள். உத்யோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். ஜூன் 8 முதல் செவ்வாயும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கூடுதல் பலம் கிடைக்கும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கு உயரும். ராசிக்குள் சஞ்சரித்து சங்கடங்களை உண்டாக்கி வந்த ராகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு உண்டானாலும் அவை பயனுள்ளதாக இருக்கும். விரய ஸ்தானத்திற்கு ராசிநாதனின் பார்வை கிடைப்பதால் வீண் செலவு கட்டுப்படும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குதல், பொன் பொருள் சேர்க்கை என்று இருப்பு கரையும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசு வழியில் லாபத்தை வழங்குவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்துக் கொடுப்பார். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழிலில் லாபம் உண்டாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 7, 8.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மையை உண்டாக்கும்.
ரேவதி
சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திராதிபதி புதன் வீட்டில் ராசியாதிபதி சஞ்சரித்து 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராமல் ஏற்பட்ட பயம் விலகும். கடன் தொல்லை, அவமானம் என்பதெல்லாம் நீங்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செலவு எல்லாம் சுபச் செலவுகளாக மாறும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். மாதம் முழுவதும் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுத்த வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். அரசு வழி வேலைகளில் லாபம் உண்டாகும். ஆறாம் இட கேது உங்கள் திறமையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உழைப்பாளர்கள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9.
அதிர்ஷ்ட நாள்: மே 21, 23, 30. ஜூன் 3, 5, 12.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.