பதிவு செய்த நாள்
14
மே
2025
03:05
அன்னூர்; கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கணேசபுரம், புற்றுக்கண் மாரியம்மன் கோவிலில், 30வது ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கியது. கடந்த 7ம் தேதி கம்பம் நடப்பட்டு, பூவோடு வைக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி மாலை 108 தாய்மார்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 10ம் தேதி காலை கோவில் வளாகத்தில் விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டது. மதியம் அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அணிக்கூடை வாண வேடிக்கையுடன் எடுத்து வரப்பட்டது. நேற்று காலை மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, அலங்கார பூஜை நடந்தது. மதியம் அக்னி கரகம் எடுத்து வரப்பட்டது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வருதலும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை மஞ்சள் நீராட்டுடன் மறுபூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.