திருப்பதி வெங்டாஜலபதி கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத தரினம் எப்படி நடக்கும் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2025 12:05
திருப்பதி வெங்டாஜலபதி கோயிலில் தினமும் அதிகாலை பெருமாள் சுப்ரபாதம் கேட்டு எழுந்தருள்வார். அப்போது தொட்டிலில் துயில் கொண்டிருப்பவருக்கு போகசீனிவாசன் என்று பெயர். சுப்ரபாதம் பாடும்போது, அர்ச்சகர் இருவர், கோயில் ஊழியர் இருவர், தீப்பந்தம் ஏந்துபவர், வீணை இசைப்பவர் ஆகிய ஆறுபேரும் சந்நிதி முன்னுள்ள தங்கவாசலின் முன் நின்று எழுந்தருளச் செய்வர். அப்போது கருவறை தீபம் அனைத்தும் ஏற்றப்படும். வேதபாராயண கோஷ்டியினர் வீணை இசைத்து கவுசல்யா சுப்ரஜா எனத்துவங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடுவர். அப்போது போகசீனிவாசர் மூலவராகிய சீனிவாசப்பெருமாளிடம் எழுந்தருள்வார். பெருமாளுக்கு அப்போது பாலும் வெண்ணெய்யும் படைக்கப்படும். இந்த தரிசனத்திற்கு சுப்ரபாத தரினம் என பெயர்.