பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
மூலம் : வாழ்வின் அர்த்தம் தெரிந்து வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். ஞான மோட்சக் காரகன் கேது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளிலும் பின் விளைவுகள் பற்றி தெரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். அஷ்டம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சஞ்சரிப்பதால் அரசு வழியில் நெருக்கடி ஏற்படலாம். சிலர் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம். உடல்நிலையில் பாதிப்பு தோன்றலாம். கணக்கு வழக்குகளில் கவனமாக இல்லாத வியாபாரிகள் அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் சங்கடமெல்லாம் விலகிப் போகும். செயல்களில் கவனம் இருக்கும். நினைத்ததை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். எதிர்ப்பு மறைமுகத் தொல்லை என இருந்ததெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குருவின் பார்வை கிடைப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். வரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எந்த நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு ஆக. 3 க்கு பிறகு புதிய சொத்து சேரும். குலதெய்வ வழிபாட்டை ரத்த உறவுகளுடன் மேற்கொள்வீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆலோசனையின்படி செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜூலை 24, 25.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 30. ஆக. 3, 7, 12, 16.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.
பூராடம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து வெற்றி பெறும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். நட்சத்திராதிபதி சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உடல் நிலையில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றி மறையும். எதிர்பாலினரால் உங்கள் வேலைகளில் தடுமாற்றம் ஏற்படும். சிலர் காதல் வலையிலும் சிக்கக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு ராசியை பார்ப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இதுவரை தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் குழப்பம் விலகும். பொருளாதார நிலை உயரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். தைரிய வீரிய ஸ்தானம் பலமடைவதால் நினைத்ததை சாதித்திடக்கூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். ஆக. 3 முதல் உங்கள் ஜீவனாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இடம், வீடு, புதிய பொருள் சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குல தெய்வ அருளால் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 25, 26.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 12, 15.
பரிகாரம்: ஸ்ரீரங்க நாதரை வழிபட சங்கடங்கள் விலகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: பிறரை வழிநடத்தும் திறமையும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பாக்கியாதிபதியும் நட்சத்திர அதிபதியுமான சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் இதுவரை இருந்த முன்னேற்றமான நிலையில் எதிர்பாராத பின்னடைவு ஏற்படும். உங்கள் கவனக் குறைவால் காரியத்தில் தடைகளையும், பொருளாதாரத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். உடல் நிலையில் பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். வியாபாரம், தொழிலில் நெருக்கடி உருவாகும். சிலர் அரசுக்கு அபராதம் செலுத்தும் நிலை உருவாகும். ராசிநாதன் 7ல் சஞ்சரித்து லாப ஸ்தானம், ராசியை பார்ப்பதால் அனைத்தையும் சமாளித்திடக்கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் முயற்சிகள் வெற்றியாகும். அதன் வழியாக எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். ஆக. 3 முதல் பூமி, வீடு சம்பந்தமான நீண்டநாள் கனவு நனவாகும். புதிய முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சார நிலை எதிர்மறையாக இருப்பதால் எதிர்பாலினரால் இழப்புகளை சந்திக்கும் நிலை சிலருக்கு ஏற்படும் என்பதால் சுய ஒழுக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது ஞானத்தை அதிகரிப்பார். தடைபட்ட குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வைப்பார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகளை போக்குவார். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி குறைந்து இணக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 19, 21, 28, 30. ஆக. 1, 3, 10, 12.
பரிகாரம்: அதிகாலையில் நீராடி சூரியனை வழிபட குழப்பம் விலகும்.