பதிவு செய்த நாள்
15
ஜூலை
2025
03:07
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெறும் உங்களுக்கு, திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக ஆடி. சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை வெளியூரிலும் தொடங்க முயற்சி மேற்கொள்வர். சிலர் வசிக்கும் இடத்தை, ஊரை விட்டு வேறு இடத்திற்கு மாறுவதற்கு முயற்சிப்பீர்கள். இவையெல்லாம் தொழில் காரணமாகவும், பணியின் காரணமாகவும் ஏற்படும் நிலையாகும். மாதம் முழுவதும் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு எதிர்ப்புகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தினாலும், அவரது பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். தொழிலை முன்னேற்றம் அடைய வைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். விரய செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். வரவு செலவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும், ஜூலை 30 வரை செவ்வாயும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் அல்லது எதிரிகளால் இடையூறுகள், அவமானம் என்று சிலருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் சுய ஒழுக்கத்திலும் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் அவர்களை அனுசரித்துச் செல்வதும் அவசியம். சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தேவையான பணம் வரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 26, 27.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 19, 28. ஆக. 1, 8, 10.
பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை உண்டாகும்.
திருவோணம்: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் குழப்பமின்றி செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூலை 26 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஜூலை 27 முதல் ஆக 3 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைபட்ட பணம் வரும். சிலருக்கு புதிதாக சொத்து சேரும். குருபார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மனதில் குழப்பம் விலகும். புதிய நம்பிக்கை பிறக்கும். பெரியோர்களின் ஆதரவும் உறவுகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நேரம் காலம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள் என்றாலும், 7 ம் இட சூரியன் இடமாற்றத்தை ஏற்படுத்துவார். அஷ்டம கேது உடல் நிலையில் நலிவை உண்டாக்குவார் என்பதால் கவனமாக இருப்பது அவசியம். பிரச்னைகள் வரும் என தெரியும் நிலையில் வேலைகளில் ஈடுபடாமல் இருந்தாலே சங்கடம் ஏற்படாது. வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜூலை. 27, 28.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 17, 20, 26, 29, ஆக. 2, 8, 11.
பரிகாரம்: திங்களன்று சந்திர பகவானை வழிபட சங்கடங்கள் விலகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்: அசாத்திய துணிச்சலும் தைரியமும் கொண்ட உங்களுக்கு நிதானமாக செயல்பட வேண்டிய மாதம் ஆடி. தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஜூலை 30 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். எதிரிகளின் கை மேலோங்கும். சிலர் உங்கள் மீது வீண்பழி சுமத்துவர். அதனால் உங்கள் மனம் சங்கடத்திற்கு ஆளாகலாம். வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். குருபார்வை ஜீவன ஸ்தானத்திற்கும் தன ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் தொழில் வழியாக ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் நெருக்கடிகள் நீங்கும். நிம்மதியான நிலை ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். ஜூலை 25 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் திட்டங்கள் பலிதமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். ஜூலை 26 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன் பொருள் வாகனம் வாங்குவீர்கள். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உழைப்பாளர்களின் நிலை உயரும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை. 17, 18, 26, 27. ஆக. 8, 9,
பரிகாரம்: திருப்போரூர் முருகனை வழிபட சங்கடம் விலகும்.