பழநி கோயிலில் தங்கரத புறப்பாட்டில் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2025 11:07
பழநி; பழநி கோயிலில் ஆடி கார்த்திகை தினமான நேற்று விடுமுறை தினமும் இணைந்து வந்ததால் பக்தர்கள் அதிக அளவில் தங்க ரத புறப்பாட்டில் திரண்டனர். பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை நட்சத்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இந் நிலையில் வெளியூர்,வெளி மாநில, உள்ளூர் பக்தர்கள் அதிகாலை 4:00 மணி முதல் பழநி கோவிலில் தரிசனத்திற்கு திரண்டனர். நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 7 மணி அளவில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை தினத்தை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை, தங்கமயில் புறப்பாடு நடைபெற்றது.