இன்று பிரதோஷம்; ஆலகால விஷத்தை உண்ட ஈசனை வணங்க அனைத்தும் நலமாகும்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 10:08
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. பிரதோஷமான இன்று சிவனை வழிபட சிறப்பான வாழ்வு அமையும். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும். அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள். இந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது. கோவில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் சிவ பூஜை, இஷ்ட தெய்வத்தை வழிபடுதல் நன்று. இன்று அம்மன், சிவன், முருகனை வழிபடுங்க.. அனைத்தும் நலமாகும்..!