எந்த ஒன்றிலும் திட்டமிட்டு நேர்மையாக செயல்படும் உங்களுக்கு, ஆவணி யோகமான மாதமாகும். பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் ஐந்தாமிட கேதுவால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். முன்னோரின் ஆசி கிடைக்கும். நீண்டநாள் விருப்பங்கள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மூன்றாமிட குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம் சென்றவர்களின் மனம் மாறும். பெரியோரின் வழிகாட்டுதலால் பிரிந்தவர்கள் ஒன்று சேரும் நிலையுண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். வரவு அதிகரிக்கும். லாப ராகு உங்கள் கனவுகளை நனவாக்குவார். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரம் விருத்தியாகும். மாதத்தின் முற்பகுதியில் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்கள் பலம் கூடும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான மாதமாக இருக்கும்.
நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, ஆவணி நன்மையான மாதமாகும். ராசிநாதன் செவ்வாய் செப்.14 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். எதிரிகள் உங்களிடம் வந்து சமாதானம் பேசும் நிலை உருவாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். லாப ஸ்தானத்தில் குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் ராகுவால் தடைபட்ட வரவு வரும். சேமிப்பு உயரும். செலவு கட்டுப்படும். கனவுகள் நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு தேடி வரும். குரு பார்வைகளால் திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். பெரியோரின் ஆதரவும், துணையும் நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவதுடன், புதிய வீட்டிலும் குடியேறுவர். மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடத்தக்கூடிய நிலையும் சிலருக்கு ஏற்படும். விவசாயிகளுக்கு இதுவரை இருந்த பாதிப்புகள் குறையும். விளைச்சலால் வருமானம் கூடும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
எந்த ஒன்றிலும் தனித்துவம் கொண்டவரான உங்களுக்கு, பிறக்கும் ஆவணி அதிர்ஷ்டமான மாதமாகும். மூன்றாமிட குருவின் பார்வைகளால் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படும். செல்வாக்கு உயரும். திறமை வெளிப்படும். 7,9,11 ம் இடங்கள் சுபத்துவம் பெறுவதால் கூட்டுத் தொழில் மேன்மை அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். திருமணம் கைகூடும். சிலருக்கு புதிய சொத்து சேரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் விலகும். காலம் நேரம் அறிந்து திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளின் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ராசிநாதன் மாதம் முழுவதும் 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நடத்த முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகுவதுடன், கடன் தொல்லையும் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தொழில் எதிர்பார்த்த லாபம் தரும். விவசாயம் முன்னேற்றமடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வரும்.