பூரட்டாதி 4 ம் பாதம் : எந்த ஒன்றையும் தெளிவாக திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ராசிநாதன் 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் அவருடைய பார்வைகள் 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் இதுவரை இருந்த உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். நெருக்கடி விலகும். பிறரால் ஏற்பட்ட சங்கடம், அவமானம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் அதிகரிக்கும். திடீர் வரவால் வாழ்க்கை வளமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரய செலவு கட்டுக்குள் வரும். நிம்மதியான துாக்கம் இல்லை என அவதிப்பட்டு வந்த நிலை மாறும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஜூலை 25 முதல் ஆக.3 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த வரவு வரும் என்றாலும், அதன் பிறகு கவனமாக செயல்படுவது நல்லது. சிலருக்கு வீண் பழிச்சொல்லும் ஏற்படும் என்பதால் சுய ஒழுக்கத்திலும் இக்காலத்தில் கவனம் தேவை. அந்நியரிடம் ஓரடி விலகி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்திலும் உறவுகளிடமும் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். பொருளாதார நிலை உயரும். பொன் பொருள் சேரும். உழவுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். பணியாளர்களின் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 31
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 30. ஆக. 3, 12
பரிகாரம்: ஆபத்சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி: நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதம். ராசிநாதன் 4 ம் இடத்தில், நட்சத்திராதிபதி விருது ஸ்தானத்தில் என்ற நிலை இருந்தாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது மாதம் முழுவதும் உங்கள் நிலையில் முன்னேற்றம் தருவார். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிறரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஜூலை 30 வரை உங்கள் தன, குடும்பாதிபதி செவ்வாயும் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் அசாத்தியமான துணிச்சல் ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகளை ஒவ்வொன்றாக முடிவிற்கு கொண்டு வருவீர்கள். குருபார்வைகள் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். என்னதான் சம்பாதித்தாலும், கையில் பணம் தங்கவில்லையே என்ற நிலை மாறும். விரய செலவு குறையும். சேமிப்பு அதிகரிக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் என்று வாங்குவர். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும் என்றாலும் ஆக. 3 முதல் புதனின் சஞ்சாரம் சில சங்கடங்களை ஏற்படுத்தும். உங்களைத் துாற்றுவதற்கு நேரம் காலம் பார்த்திருந்தவர்கள் உங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும் நன்மையை அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வயதானவர்கள் உடல்நிலை சீராகும்.
ரேவதி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஜூலை 25 முதல் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். இடம், வீடு சம்பந்தப்பட்ட விவகாரம் முடிவிற்கு வரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு உயரும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் செயல்களை லாபமாக்குவார். தைரியத்தை அதிகரிப்பார். மற்றவரால் முடியாது என கைவிட்ட வேலைகளை உங்கள் கையில் எடுத்து முடித்து ஆதாயம் காண்பீர்கள். மாதம் முழுவதும் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கோரிக்கை நிறைவேறும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஜூலை 30 வரை செவ்வாயும் சாதகமாக சஞ்சரிப்பதால் வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சகோதரர் ஒற்றுமை அதிகரிக்கும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வம்பு வழக்கு என சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குரு பார்வைகளால் உங்களை பயமுறுத்தி வந்த பிரச்னைகள் விலகும். பிறரால் சந்தித்த அவமானம் விலகும். அரசு பணியில் இருப்பவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். நீண்ட காலமாக தள்ளிப்போன குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.