Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபரணி; தவறவிடக் கூடாத நாள்.. ... சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வணங்கும் பிரசன்ன கணபதி சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வணங்கும் ...
முதல் பக்கம் » துளிகள்
அவிதவா நவமி, பாஞ்சராத்திர ஜெயந்தி; மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிதவா நவமி, பாஞ்சராத்திர ஜெயந்தி; மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசம்!

பதிவு செய்த நாள்

15 செப்
2025
10:09

தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி நாளாகும். கடந்த எட்டு நாட்களாக மஹாளய பக்ஷம் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் .


மகாளய பட்சத்தில் ஒன்பதாம் நாளான அவிதவா நவமியிலும் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். இந்தச் சுமங்கலி பிரார்த்தனை சிராத்தத்திற்கு சமமானது.நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.


சுமங்கலி பிரார்த்தனை: சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது. நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல கணவரை அடைந்து கணவரின் கோபதாபங்களையும் குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தைத் தூணாக நின்று காப்பாற்றி அனைவரையும் ஒன்றிணைத்து, முக்கியமாக நமது கலாசாரத்தையும், வைதீக தர்மங்களையும், ஸம்ப்ரதாயங்களையும் கடைப்பிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள். இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டு மாகப் பரமபதம் அடைவது. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக இறந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு சிராத்தத்திற்கு மறுநாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்யப்பட வேண்டும். மகாளய பட்சத்தில் நவமி நிதியில் சுமங்கலி வழிபாடு  செய்தால், வீட்டில், மஹாலட்சுமி நித்யம் வாசம் செய்யும் அருள் கிடைக்கும். இன்று நவமி திதி இன்று இதை செய்ய முடியாதவர்கள், அமாவாசை அன்றோ, வரும் நவராத்திரியில் ஓர் நாளோ செய்யலாம். அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தின் மிச்சம் உள்ள நாளில் கொண்டாடப்படுவது பாஞ்சராத்திர ஜெயந்தி. பாஞ்சராத்திர ஜெயந்தியில் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடுதல் சிறப்பு,

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar