புத்திசாலித்தனம், தைரியத்துடன் செயல்பட்டு பணிகளில் வெற்றி பெறும் உங்களுக்கு, கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். காய்ந்து போன நிலத்தில் மழை பெய்வது போல் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் பலம் கூடும். தலைமையின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 1, 2
அதிர்ஷ்ட நாள்: நவ.19, 23, 28. டிச. 5, 10, 14
பரிகாரம் நடராஜரை வழிபட வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
அஸ்தம்
எடுத்த வேலையை முடிக்கும் ஆற்றலும் தெளிந்த சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். சத்ரு, ஜெய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியும் யோக, போகக்காரகன் ராகுவும் உங்கள் வாழ்க்கைக்கு புதிய பாதையை காட்டுவர். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம், தொழிலில் தோன்றிய போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். துணிச்சல் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு நீண்ட நாள் கனவு நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு, வழக்குகள் என்றிருந்த நிலை மாறும். எடுத்த வேலைகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். சிலர் உத்தியோகத்தில் ஏற்பட்ட வழக்கில் இருந்து விடுபடுவர். தடைபட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ராசியாதிபதி புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 2, 3
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 5, 11, 14
பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம்
மனவலிமையும், புத்தி சாதுரியமும் கொண்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு கார்த்திகை நன்மையான மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் டிச. 6 வரை முயற்சி ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். புதிய இடம், வீடு வாங்குவது என்பது கனவாக இருந்த நிலையை மாற்றுவார். மருத்துவம், ரியல் எஸ்டேட், உணவகம், கெமிக்கல், பில்டர்ஸ் தொழில்கள் முன்னேற்றம் அடையும். காவல் துறையினரின் செல்வாக்கு, மதிப்பு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருவோருக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் சத்ரு, ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும், மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும் மாதம் முழுதும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். இதுவரையில் இல்லாத செல்வாக்கு இப்போது ஏற்படும். கடந்த கால நெருக்கடிகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் ராசிக்கு 2, 9 ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் நவ. 27 வரை 2ம் வீட்டிலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வேலைகள் திட்டமிட்டபடி நடந்தேறும். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி மறையும்.
சந்திராஷ்டமம்: டிச. 3
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14
பரிகாரம் திருத்தணி முருகனை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2025 முதல் 15.12.2025 வரை) »