Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : பங்குனி ராசி பலன் தனுசு : பங்குனி ராசி பலன் தனுசு : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
விருச்சிகம் : பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
11:03

விசாகம் 4 ம் பாதம்


வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருந்த குரு பகவான் மார்ச் 17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் வேலைகளில் குழப்பம் அதிகரிக்கும். அவசரமாக சில வேலைகளில் இறங்கி அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரிகளுக்கு போட்ட முதலீட்டையும் எடுக்க முடியாத அளவிற்கு நிலைமை மாறும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். மேல் அதிகாரிகளால் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குரு பகவானின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் விரயச்செலவுகள் ஏற்பட்டாலும், அது வாழ்க்கைக்குத் தேவையானதாக இருக்கும். உறக்கம் இன்றி தவித்தவர்களுக்கு நிம்மதியாக உறங்கும் நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தேவைக்கேற்ற பணம் வந்துகொண்டிருக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கும் குருப்பார்வை உண்டாவதால் உடல், மனநிலையில் ஏற்பட்ட சோர்வு விலகும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிறருடைய ஆலோசனைகளுக்கு இடம் கொடுக்காமல் எந்த ஒன்றாக இருந்தாலும் அதை நீங்களே முடிவு செய்வது நன்மையளிக்கும். மார்ச் 27 வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் ஆடம்பர செலவுகள் கூடும். பொன், பொருள் சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பெண்களுக்கு உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். பொதுத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 25.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 21, 27, 30. ஏப். 3, 9, 12.


பரிகாரம்; பண்ணாரி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.


அனுஷம்


எந்த நிலை வந்தாலும் மனம் தளராமல் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம  சனியாக சஞ்சரித்து, ராசியையும் பார்த்து உங்களுக்கு நிறையவே சோதனைகளை வழங்கி வந்த சனி பகவான், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அவருடைய பார்வை உங்கள் ராசியை விட்டு விலகி உள்ளது. சனி பகவான் பார்வை உங்களை விட்டு விலகுவதே பெரும் நன்மையாகும். லாப ஸ்தானத்திற்கு சனிப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இனி இருக்காது. தொடர்ந்து பல சங்கடங்களை சந்தித்து வந்த உங்களுக்கு இனி அவற்றில் மாற்றம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடையும். போட்ட முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியவர்கள் ஆதரவும் இந்த நேரத்தில் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். குரு பகவானின் பார்வைகளால் பொருளாதார நிலை உயரும். மனதில் சந்தோஷம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஏப். 1 வரை சுக ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் குரு பகவானின் பார்வை அவருக்கு கிடைப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. எனவே போராட்டம் முடிவிற்கு வரும். முயற்சியில் வெற்றி உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் மேலதிகாரியை அனுசரித்துச் செல்வதும், மாணவர்கள் மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை செலுத்துவதும் நன்மையை ஏற்படுத்தும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 25, 26.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 27. ஏப். 8, 9.


பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். சங்கடங்கள் விலகும்.


கேட்டை


உழைப்பில் ஆர்வமும், எடுத்த வேலைகளை முடிக்கும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதத்தில் நெருக்கடிகள் நீங்கும். ஏப். 6 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வாகனம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ராசியை விட்டு சனி பகவான் பார்வை விலகி இருப்பதால் உடல் ரீதியாக ஏற்பட்ட நலிவுகள் விலகும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அந்நியரின் ஆதரவும் அக்கறையும் உங்கள் பலத்தை மேலும் உயர்த்தும். சோகத்தில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கு தெளிவு ஏற்படும். குரு பகவானின் பார்வைகள் விரய மற்றும் தன குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். மனதிலும் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நிலவிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படத் தொடங்குவீர்கள். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியில் கவனமாகவும், மேல் நிலையில் இருப்பவர்கள் குற்றம் சொல்லாத அளவிற்கு நடந்து கொள்வதும் நன்மையாகும்.  மாணவர்களுக்கு இது பொதுத்தேர்வு காலம் என்பதால் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 26, 27.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, ஏப். 5, 9.


பரிகாரம்: வீர ராகவப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar