உழைப்பையே மூலதனமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். நடைபெற்ற சனிப் பெயர்ச்சி பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிக்கும். எடுத்த வேலைகளில் வெற்றிபெற முடியும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். போராட்டமாக இருந்த வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களும் இனி உங்களிடம் வந்து சமாதானம் பேசக்கூடிய நிலை உண்டாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாயும் ஏப். 1 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இத்தனை நாளும் பயந்தும் பதுங்கியும் வாழ்ந்து வந்த நீங்கள் துணிச்சலுடன் நடைபோடுவீர்கள். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அரசு வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். வாழ்க்கையில் எதுவுமே கிடைக்கவில்லை ஒரே போராட்டமாக இருக்கிறது என்று புலம்பி வந்த நிலையிலும் மாற்றம் ஏற்படும். தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். மாணவர்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 23.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.
பரிகாரம்: அங்காள பரமேசுவரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
சுவாதி
உழைப்பதற்கு தயங்காத உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். யோகக்காரகன் ராகு ஐந்தாம் இடத்தில் சஞ்சரித்தாலும், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ஐந்தாம் இடத்திற்கு உண்டாவதால், உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். எத்தனை முயற்சிகள் எடுத்தும் நடக்காத வேலைகள் இப்போது முடிவிற்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும். லாபாதிபதி சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனியுடன் இணைந்து சஞ்சரிப்பதால் இத்தனை நாளும் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு முடிவு உண்டாகும். சலிப்பும் வேதனையுமாக வாழ்ந்த நிலையில் மாற்றம் ஏற்படும். வேலைக்காக முயற்சித்து தோல்வி அடைந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு தடைபட்டுவந்த பதவி உயர்வு கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உடல், மன நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். பெண்களுக்கு நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். ஏப். 6 முதல் பாக்யாதிபதி புதனும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட கவனக்குறைவு விலகும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 23, 24.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 22, 31. ஏப். 4, 6, 13.
பரிகாரம்: துர்கையை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்
எந்த ஒன்றையும் முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால், இதுநாள்வரையில் இருந்த சங்கடங்கள் விலகும். பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்களைக் கண்டு கொள்ளாமல் விலகிச் சென்றவர்களும் பாக்ய குருவால் மீண்டும் உங்கள் தயவை நாடிவருவர். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உங்கள் ராசியை குருபகவான் பார்ப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு பட்டம், பதவி தேடி வரும். சிலர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி அடைவீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் புத்திரர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அவர்களால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஆத்ம காரகன் சூரியன், கர்மக்காரகன் சனி, ஞான மோட்சக்காரகன் கேது, ஞானக்காரகன் குரு என்று இந்த மாதத்தில் உங்களுக்கு பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் முடிவிற்குவரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விவாகரத்திற்காக நீதிமன்றம் வரை சென்றவர்களும் மீண்டும் பேசி சமாதானம் அடையக்கூடிய நிலை உருவாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி கிடைக்கும். விவசாயத்தில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள், வாகனம் என்று வாங்குவதுடன் பிறருக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெற முடியும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 24. 25.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 30. ஏப். 3, 6, 12.
பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »