Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : பங்குனி ராசி பலன் மகரம் : பங்குனி ராசி பலன்  மகரம் : பங்குனி ராசி பலன்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
தனுசு : பங்குனி ராசி பலன்
எழுத்தின் அளவு:
தனுசு : பங்குனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மார்
2026
11:03

மூலம்


தன்னம்பிக்கையும் பிறரை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வருவதால் பெரியோரின் உதவியும், தெய்வ அருளும் கிடைக்கும். கடந்த மாதத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் ராசிநாதன், குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் தடைபட்ட வேலைகள் முடியும். தம்பதிகளுக்குள் தோன்றிய பிரச்னைகள் விலகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தவர்கள், விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரையில் சென்றவர்கள் மீண்டும் இணைந்து வாழும்  நிலை உருவாகும். வாழ்வில் இருந்த போராட்டங்கள் மாறி நினைத்ததை சாதித்திடும் வலிமை உண்டாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். முடங்கிக் கிடந்த தொழில்கள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கைக்கு ஆளாவீர்கள்.  வெளிநாட்டில் பணி செய்வோருக்கு நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்திலும், வெளியிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.  மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் ஆர்வம் இருக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 27, 28.

அதிர்ஷ்ட நாட்கள்: மார்ச் 16, 21, 25, 30. ஏப். 3, 7, 12.


பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட குறைகள் நீங்கும். நன்மை அதிகரிக்கும்.


பூராடம்


நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். உங்கள் தோற்றத்தில் அழகு வெளிப்படும். வருமானத் தடைகள் விலகும். குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். நவீன பொருட்கள், புதிய வாகனம் வாங்குவீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். யோகக்காரகன் ராகு மாதம் முழுவதும் சகாயஸ்தானத்தில் குருப் பார்வையுடன் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கூடும். தொழிலை விரிவு செய்வதற்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழ் கூடும். முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், பாக்யாதிபதி சூரியனும், குடும்பாதிபதி சனி பகவானும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உடல் நிலையில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் பாராட்டுதல் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை விலகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கூடும். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஏப்.1 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்னைகள் வந்தாலும் தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைகள் விலகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 28, 29.

அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 3, 6, 12.


பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும்.


உத்திராடம் 1 ம் பாதம்


முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் தோன்றும். ஆயுள்காரகன் கர்மக்காரகன் சனி பகவானும் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுங்கள். மார்ச் 17 முதல் ராசிநாதன் குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடைந்து ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். ஏப். 6 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் அறிவாற்றலும், திறமையும் வெளிப்படும். உங்களுக்கு மேலானவர்களும் உங்கள் ஆலோசனைகளை கேட்பார்கள். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். நெருக்கடிகள் நீங்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு உயரும். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். முதியவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம் மார்ச் 29.

அதிர்ஷ்ட நாட்கள்: மார்ச் 19, 21, 28, 30. ஏப். 1, 3, 10, 12.


பரிகாரம் : அர்த்தநாரீசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar