பதிவு செய்த நாள்
12
ஜன
2013
12:01
பொறுப்பாக பணிசெய்து உரிய பலன் பெறும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாதத்தில் பாதிநாள் தனுசுவிலும், மீதிநாள் மகரத்திலும் அமர்வுபெற்று சிறப்பான பலன்களை வழங்குகிறார். சனி, ராகு, புதன் தன் பங்கிற்கு நல்ல பலன்களை வழங்குகின்றனர். கரும்பாய் இனிக்கிற மாதம். பணம் சம்பாதிக்க கவனத்துடன் பணிபுரிவீர்கள். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி சீராக கிடைக்கும். பயணத்தில் மிதவேகம் நல்லது. புத்திரர்கள் மாத முற்பகுதியில் உடல்நலக்குறைவினால் அவதிப்படுகிற கிரகநிலை உள்ளதால் சிகிச்சை @தவைப்படும். பூர்வ புண்ணிய சொத்து பராமரிப்பதிலும் ஆவணங்களை பாதுகாப்பதிலும் கவனம் வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி நிம்மதி பெறுவீர்கள். அதிர்ஷ்டவசமாக நன்மைகள் உருவாகும். கடனில் ஒரு பகுதி அடைபடும். தம்பதியர் குடும்ப நலன் குறித்து ஆலோசிப்பர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். நண்பர்கள் உறுதுணையாக செயல்படுவர். தொழிலதிபர்கள் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்கச் செ#து லாபத்தை உயர்த்துவர். வியாபாரிகள் லாப விகிதம் குறைத்து விற்பனையில் புதிய இலக்கை அடைவர். பணியாளர்கள் பணியில் இருந்த குளறுபடிகளைச் சரிசெய்து, வேலை களைத் திறம்பட முடிப்பர். குடும்பப் பெண்கள் சீரான பணவசதியால் வாழ்வை இனிதாக்குவர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணி நிறைவேற்றி நிர்வாகத்திடம் நன்மதிப்பு, சலுகை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர் பெற்று உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். உபரி பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் கிடைக்கும். மாணவர்கள் வெளிவட்டார பழக்கம் குறைத்து படிப்பில் தரதேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் வாழ்வு சுபிட்சமாகும்.
உஷார் நாள்: 6.2.13 காலை 10.54- முதல் 8.2.13 மதியம் 1.29.
வெற்றி நாள்: ஜனவரி 26, 27, 28
நிறம்: நீலம், சிவப்பு எண்: 1, 8