Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : வைகாசி ராசி பலன் மேஷம்: ஆனி ராசி பலன் மேஷம்: ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மீனம் : வைகாசி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம் : வைகாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மே
2026
01:05

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்


எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைக்கும் எண்ணம் பூர்த்தியாகும். இழுபறி வேலை முடியும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு நிலை மாறும். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரவு அதிகரிக்கும். உங்கள் சொல்வாக்கிற்கு மரியாதை ஏற்படும். கடனாக கொடுத்த பணம் வாசல் தேடி வரும். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் இருப்போரின் ஆதரவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் வரும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்னை முடியும். சிலர் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: மே 27.

அதிர்ஷ்ட நாள்: மே 21, 30. ஜூன் 3, 12.

பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி: புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உடலில் இருந்த சங்கடம் விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கு உயரும். நோய் நொடி என்பவருக்கு மருத்துவச்செலவு குறையும். ஆத்மகாரகன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியம் தன்னம்பிக்கை வேகம் கூடும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். தலைமையின் நம்பிக்கைக்குரியவராக இருப்பீர். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். ஜென்ம சனியால் சங்கடப்படுபவருக்கு சுய ஜாதகம் பலமாக இருப்பின் சங்கடம் விலகும். மே 26 முதல் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் சிலருக்கு திருமணம் முடியும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னை நோய் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

சந்திராஷ்டமம்: மே 28.

அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.

பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட தடை விலகும். எடுக்கும் வேலை முடியும்.


ரேவதி: திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இம்மாதம் முழுவதும் ஆத்ம காரகன் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். செல்வாக்கு உயரும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்ப்பு இல்லாத நிலை ஏற்படும். உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும். மே 27 முதல்  புதன் கேந்திர பலம் பெறுவதால் பலவீனமாக இருந்தவர்களும் பலமிக்கவர்களாக மாறுவீர். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர். எடுத்த வேலையை முடித்துக் காட்டுவீர். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அடமானத்தில் இருந்த பத்திரம், பொருட்கள் வீட்டிற்கு வரும். மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞானக்காரகன் குருவால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.  குழந்தைக்காக தவமிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மனக் குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள் திறமை வெளிப்படும். கையில் பணம் புரளும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்களை நீங்களே மாற்றிக்கொண்டு செயல்படுவீர். சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.தம்பதிக்குள் இடையே ஏற்பட்ட பிரச்னை முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவீர்.

சந்திராஷ்டமம்: மே 29, 30.

அதிர்ஷ்ட நாள்: மே 21, 23. ஜூன் 3, 5, 12, 14.

பரிகாரம்: வேதபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar