Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் ‘கோசாலை’ ... கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி விழா கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அத்துமீறும் வியாபாரிகள்: பக்தர்கள் தவிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அத்துமீறும் வியாபாரிகள்: பக்தர்கள் தவிப்பு

பதிவு செய்த நாள்

27 மே
2026
06:05

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தெற்கு நுழைவாயிலில் அருகே, வியாபாரிகள் அத்துமீறி வைக்கப்படும் தற்காலிக கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நித்ய நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தவிர கந்தசஷ்டி, மாசி மாத பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.

விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், கந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக வடக்கு குளக்கரை பகுதி உள்ளது. பல்வேறு வாகனங்களில் வரும் பக்தர்கள், குளக்கரைக்குள் வந்து தெற்கு நுழைவாயில் வழியாக கோவிலுக்குள் செல்வர்.

கடந்த 2023ல் மேற்கண்ட வழியில் அனுமதியின்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளால், இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். அதன் பின் தற்காலிக கடை நடத்தும் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பரணி, கிருத்திகை, விசேஷ நாட்களில் மட்டும் கடைகள் வைக்க அப்போதைய அமைச்சரிடம் அனுமதி கோரினர். இதற்கு, பரணி, கிருத்திகை நாட்களில் மட்டும் தற்காலிக கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அனைத்து விசேஷ நாட்களிலும் அனுமதியின்றி கடை அமைக்கப்படுகிறது.

குறிப்பாக கந்தசுவாமி கோவிலின் தெற்கு நுழைவாயிலில், வடக்கு மற்றும் கிழக்கு குளக்கரை சந்திப்பு பகுதியில் வியாபாரிகள் அத்துமீறி கடைகள் வைத்துள்ளனர். இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதே பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் தங்களது காலணிகளை விடுவதற்கு, தனி கட்டடம் அமைக்கப்பட்டது. தற்போது அவற்றையும் மறைத்து, வியாபாரிகள் அத்துமீறுவதாகக் கூறப்படுகிறது.எனவே, பக்தர்களுக்கு இடையூறாக அனுமதியின்றி அமைக்கப்படும் தற்காலிக கடைகளை கோவில் நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar