Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : ஆனி ராசி பலன் விருச்சிகம் : ஆனி ராசி பலன் விருச்சிகம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம் : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
01:06

துலாம்


சித்திரை 3, 4 ம் பாதம்

உழைப்பால் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்க்கும் செவ்வாய் உங்களுக்குள் வேகத்தை அதிகரிப்பார். திட்டமிடாமல் செயல்பட வைத்து அதனால் சங்கடங்களுக்கு ஆளாக்குவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகளை உண்டாக்குவார். ஜூன் 19 ம் தேதி முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு சங்கடங்கள், மனதிற்குள் பயம், தேவையற்ற பிரச்னைகள், நெருக்கடிகள் என உண்டாகும். ஜூன் 6 வரை ராசிநாதன் சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். ஆசையின் காரணமாக இழப்புகள் தோன்றும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு உருவாகும் என்றாலும், குருப்பார்வை தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சிலருக்கு புதிய இடம், வீடு என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். ஆனி மாதத்தில் வியாபாரிகள் திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் வார்த்தைக்கு மதிப்பளிப்பதால் பிரச்னைகளை ஏற்படாமல் போகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 10.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.


பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


சுவாதி

நினைத்தபடி நினைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால், எல்லாவற்றிலும் உங்களுக்குள் ஒரு வேகம் உண்டாகும். நினைத்ததை அடைய வேண்டும் என்ற முயற்சி இருக்கும். சிலருக்கு குடும்பத்திற்குள் சலசலப்பு ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். உறவினர்களுக்கும் உங்களுக்கும் ஒற்றுமை இல்லா நிலை உருவாகும். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். உங்கள் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான புதன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும் என்றாலும், எடுக்கும் வேலையில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். மறதியின் காரணமாக சிலருக்கு சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தவை இழுபறியாகும். வருமானத்தில் தடை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களுக்காக மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவதும் பின் தொடர்வதும் நன்மை அளிக்கும். உறவுகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். இந்த நேரத்தில் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எல்லா விதமான நெருக்கடிகளும் உங்களை விட்டு விலகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும். உடல்நிலை சீராகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்றாலும், புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம் அதனால் சங்கடங்களே அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். நெருக்கடிகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் தடை ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 11

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 22, 24. ஜூலை 4, 6, 13, 15.


பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட எதிர்ப்பு விலகும். நோய்நொடி நீங்கும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதம்

எதிர்காலத்தை மனதில் எண்ணி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன ஞானக்காரகன் குரு பகவான் பத்தாம் இடத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த செல்வாக்கில் பின்னடைவு உண்டாகும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும் என்றாலும், குரு பகவானின் பார்வைகள் குடும்ப, சுக, சத்ரு ஜெய  ஸ்தானங்களுக்கு கிடைப்பதால், எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த சந்தோஷமும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். ஆறாமிட சனி பகவானுக்கும் குருப் பார்வை உண்டாவதால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். நோய்நொடி என்றிருந்த பாதிப்பு நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வம்பு வழக்கு என்று பயந்து பயந்து வாழ்ந்த நிலை மாறும். எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், ராசிநாதன் சுக்கிரன் ஜூன் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை. வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வதற்கு முன்னதாக சந்தை நிலவரத்தை அறிந்து செய்வது நன்மையாகும். மாதம் முழுவதும் லாப கேது உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பார். பொருளாதார நிலை சீராக இருக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை கேட்டு செயல்படுவதும் பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பதும் நன்மையாகும். பாக்ய ஸ்தானத்தில் உங்கள் லாபாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஒரு பக்கம் சங்கடங்கள் ஏற்பட்டாலும் மறுபக்கம் அதிலிருந்து விடுபடக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனைத்திலும் கவனம் அவசியம். சட்ட சிக்கல்களுக்கு உட்பட்டு நடந்து கொள்வது நன்மை அளிக்கும். சிபாரிசுகளுக்கு இந்த நேரத்தில் இடம் கொடுக்காமல் இருப்பது நன்மையாகும். வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 12.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30. ஜூலை 3, 6, 15.


பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar