மேலூர்: தைப் பூசத்தை முன்னிட்டு, மேலூர் அருகே செம்மினிபட்டியில் காவடி எடுத்து அலகு குத்தி வந்த பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இங்கு ஆண்டி பாலகர் எனும் பழமையான கோயில் உள்ளது. மூலவராக முருகனின் வேல் மட்டும் இங்குள்ளது. விவசாயம் செழிக்கவும், நோயின்றி வாழ்க்கை அமையவும் ஆண்டுதோறும் இங்கு தைப்பூச திருவிழா நடக்கிறது.நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் ஏராளமானனோர் இறங்கி, நேர்த்திக் கடன் செலுத்தினர். பின், மூலவருக்கு, அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது.