கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேங்கடநாதன் என்ற ஸ்ரீநிகமாந்த தேசிகன் அருளிச் செய்தது- கோதா ஸ்துதி. ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாளை சேவித்த படி கூறிய துதி. அதன் பொருள் சுருக்கம்;கற்பகம் போன்று அருள் தருபவள் நீ! பொறுமையின் பூமியின் திருவடிவம் நீ! வேத வாக்குகளுக்கும் எட்டாத பெருமை கொண்டவள் நீ! கண்ணனை தொழுது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய திவ்ய ஸக்திகளை தந்து அருள் புரிந்தவள் நீ! பெருமானையே தன் வசம் செய்தவள் நீ!தந்தையை பெரியாழ்வார் எனும் விருது பெறச் செய்தவள் நீ!பிறந்திட்ட தென் திசை புகழ் பெற காரணம் நீ! வேத ஸ்ரூருபனாய் சகல சக்திகளும் நிறைந்தவளாய், கருடனை வாகனமாக கொண்டவனாய், பரம புருஷனான ஸ்ரீமத் நாராயணனை வரித்தவள் நீ!சூடிக்கொடுத்தவள் நீ! உன்னை ஆராதித்த காரணத்தினால் மன்னர்களும் இன்பம் எய்தினர். உன் குழந்தைகளான எங்களுக்கு என்றென்றும் பரம புருஷனிடம் பரிந்து வருவது தாயாகிய உன் அருளே!நாங்கள் உன் குழந்தைகள். எங்கள் குற்றங்களை பொறுத்தருள் தாயே! எம்பெருமானை தன்வசம் ஆக்கிக் கொண்ட நம் தாய் என்றென்றும் நம் உள்ளத்தில் எழுந்தருளில் இருப்பாளாக!