பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.
இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார்.
ஆண்டாள் திருமணத்தின்போது, கருடாழ்வார் சுவாமியை ஸ்ரீரங்கத்திலிருந்து அழைத்து வந்தார். இதனாலும், மாப்பிள்ளை தோழனாகவும், எப்போதும் பெருமாள், தாயாரை வணங்க விருப்பப்பட்டதாலும் அருகில் இருப்பதாகவும், அவருக்கு மரியாதை செய்யும்விதமாக