Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ஆவணி ராசி பலன் சிம்மம் : ஆவணி ராசி பலன் சிம்மம் : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கடகம் : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம் : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்


தெளிவான சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் குரு பகவான் அலைச்சலை அதிகரிப்பார். வேலை பளுவை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் மாறுதலை ஏற்படுத்துவார் என்றாலும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகளில் முடிவு ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன்வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்த இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். அரசியல் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் என்றாலும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. உடன் இருப்போரின் மனம் புண்படாதவாறு நடந்து கொள்வது அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். உங்கள் குடும்ப பிரச்னைகளையும் சொந்த விவகாரங்களையும் மற்றவரிடம் தெரிவிக்கவும், விவாதிக்கவும் வேண்டாம். அதனால் தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும் நிலை உள்ளது. பெண்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் இருக்கும் எதிர்காலம் பற்றிய எண்ணத்துடன் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம்: ஆக. 27.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 21, 29, 30. செப். 2, 3, 11, 12.


பரிகாரம்: மாசாணி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.


பூசம்

நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை கிடைத்து வந்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். வரவை விட செலவு அதிகரிக்கும். சிலருக்கு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலையும் உருவாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். சிலருக்கு பணம், ஆவணங்கள் களவு போகவும் வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். நண்பர்களுடனும் உடன் பணி புரிபவர்களுடனும் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைகளிலும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தினப்பணியாளர்கள் வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வது நன்மையளிக்கும். அதிகாரியை அனுசரித்துச் செல்வதும் அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வேலைப் பார்ப்பதும் நன்மையாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இந்த நேரத்தில் வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களும் தங்களுக்கு மேலிடத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் அவசியமாகும். விவசாயிகள் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். விரய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவு கூடுதலாக வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை. பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் அவசியம் சிலருக்கு உடல் நிலையில் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது இந்த நேரத்தில் நன்மையாகும். குடும்ப விவகாரங்களை பிறரிடம் வெளிப்படுத்துவதால் குடும்பத்திற்குள் பிரச்னைகளும் நிம்மதியற்ற நிலையும் உருவாக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையளிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 28.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 26, 29. செப். 2, 8, 11.


பரிகாரம்: குச்சனூர் சனீஸ்வரனை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.


ஆயில்யம்

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் முற்பகுதியில் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும் என்றாலும், விரய ஸ்தானத்தில் உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரத்திலும் வரவு செலவிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். வெளியூர் பயணத்தில் பணம் பொருட்கள் களவு போக வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக பயணிப்பது நன்மையாகும். வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச் செல்வதும், சுய தொழில் செய்வோர் புதிய முதலீட்டில் எச்சரிக்கையாக இருப்பதுடன் ஒவ்வொரு வேளையிலும், பொறுப்புகளிலும் கவனமாக இருப்பதும் நன்மையளிக்கும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு கூட்டாளிகளுடன் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் அனுசரித்துச் செல்வதும் இந்த நேரத்தில் மிக அவசியம். தசா புத்திகள் சாதகமற்று இருப்பவர்கள் அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயிகள் கால நிலை அறிந்து செயல்படுவதும் விளைச்சலில் கவனமாக இருப்பதும் இந்த மாதத்தில் அவசியம். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். பெண்களுக்கு வேலைப் பார்க்கும் இடத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வதும் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். திருமண வயதினருக்கு வரன்கள் வந்தாலும் ஜாதக பொருத்தம் பார்த்து முடிவு செய்வது நன்மையளிக்கும். சிலருக்கு உடல்நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். மருத்துவ செலவுகளும் ஏற்படும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டுவிட்டு ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பதால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: ஆக. 29.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 23. செப். 2, 5, 11, 14.


பரிகாரம்: திருவிக்ரமனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar