Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ஆவணி ராசி பலன் கன்னி : ஆவணி ராசி பலன் கன்னி : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம் : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

சிம்மம்: மகம்


தெளிந்த சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சுய சாரத்தில் கேது சஞ்சரிப்பதால் செயல்களில் தடைகளும் தடுமாற்றங்களும் ஏற்படும். நம்பிக்கையோடு மேற்கொண்ட முயற்சிகளிலும் இழுபறியான நிலை இருக்கும். எதை எப்படிச் செய்வது என்ற ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த நேரத்தில் அதில் பின்னடைவு ஏற்படும் என்பதால் முடிந்தவரை இந்த மாதம் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளுடனும் உடன் பணிபுரிபவர்களுடனும் அனுசரித்துச்செல்வது நன்மையாகும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும் இந்த நேரத்தில் அவசியம். வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையாகும். ஜென்ம சூரியனும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும் முன்னேற்றத்தை வழங்குவர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பும் தேடிவரும் என்றாலும் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். தங்கள் செல்வாக்கை வைத்து தவறான செயல்களை மேற்கொள்வது சங்கடங்களை உண்டாக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் ஆதாயம் நிறைந்த மாதமாக இருக்கும். நல்ல விளைச்சலும் அதற்கேற்ற வருமானமும் ஏற்படும். அஷ்டம சனி வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 29, 30.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 25, 28. செப். 1, 7, 10, 16.


பரிகாரம்: சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.


பூரம்

முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உருவாகும் பொன் பொருள் சேர்க்கையுடன் சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் கனவும் நனவாகும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வதும் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பதும் நன்மையளிக்கும். அலுவலகப்பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் நெருக்கம் காட்டாமல் இருப்பது அவசியம். தங்கள் குடும்பத்தின் பிரச்னைகளை அவர்களுடன் விவாதிக்காமல் இருப்பது நன்மையளிக்கும். சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தவறான சிந்தனைகள், தவறான நட்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனம் அவசியம். வியாபாரிகள் முடிந்தவரை இந்த மாதம் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நன்மையாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வரும் என்றாலும் உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையாகும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். சங்கடங்கள் விலகும். மருத்துவர்கள் காவல்துறையினருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை அளிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 30, 31.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 24, 28. செப். 1, 6, 10, 15.


பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


உத்திரம் 1 ம் பாதம்

எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். ராசிநாதன் சூரியன் ஜென்ம ராசிக்குள் ஆட்சி பெறுவதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பிரச்னைகள் போராட்டங்கள் என்ற நிலையில் மாற்றம் ஏற்படும். எந்த ஒன்றும் நடக்கவில்லையே என்ற மனக்கவலை விலகும். எடுக்கும் முயற்சிகள் ஆதாயம் தரும். உங்கள் பாக்யாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து என்பதெல்லாம் கூடும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு திட்டம் தீட்டுவீர்கள். சேமிப்பை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் வழக்குகள் முடிவிற்குவரும். விரய குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு கிடைப்பதால் தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு பகை போட்டி என்பதெல்லாம் இல்லாமல் போகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். குடும்பத்தினர் ஆதரவு ஏற்படும். விவசாயத்தில் லாபம் கூடும். மாணவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் விலகும்.

சந்திராஷ்டமம்: ஆக. 31.

சந்திராஷ்டமம்: ஆக. 19, 28. செப். 1, 10.


பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட அன்றைய பொழுது சுபமாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar