Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : ஆவணி ராசி பலன் விருச்சிகம் : ஆவணி ராசி பலன் விருச்சிகம் : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
துலாம் : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துலாம் : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்


மனஉறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் சப்தமாதிபதி செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும் என்றாலும் திட்டமிட்டு செயல்படுவதும், மற்றவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் நிம்மதியையும் மன அமைதியையும் கொடுக்கும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நெருக்கடிகள் எல்லாம் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். பொன் பொருள் சேரும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடி வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவும் சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்கள் தங்கள் எல்லைக்குள் கட்டுப்பட்டு வேலைப்பார்ப்பது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி தெளிவான சிந்தனையுடன் படிப்பில் கவனம் செல்லும். பிற்பகுதியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

சந்திராஷ்டமம்: செப். 3.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 24, 27. செப். 6, 9, 15.


பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


சுவாதி

திட்டங்களை தீட்டி வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதி சூரியன் லாப ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடிகள் நீங்கும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். நிதிநிறுவனம், ஒப்பந்தம், கமிஷன் வர்த்தகம் புரிபவர்கள் ஆலோசகர்கள் லாபமடைவர். ஜீவன ஸ்தான குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்னைகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். தாய் வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுத்த வேலைகள்,

 இழுபறியாக இருந்த வழக்குகள் யாவும் முடிவிற்கு வரும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான சூழல் உருவாகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: செப். 3, 4.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 24, 31. செப். 6, 13, 15.


பரிகாரம்: துர்கையை வழிபட்டுவர எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


விசாகம் 1,2,3 ம் பாதம்

கால நேரத்தை அறிந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தனக்காரகன் குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரி ஆலோசனையை ஏற்பதுடன் உடன் பணி புரிபவர்களையும் அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். ஆத்ம காரகனும் உங்கள் லாபாதிபதியுமான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருவாய் அதிகரிக்கும். எதிர்வரும் பிரச்னைகளை சமாளித்திடக்கூடிய சக்தி உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். ஞானமோட்சக்காரகன் கேதுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சேமிப்பு உயரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும் என்றாலும், யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளில் லாபம் காண முடியும். பெண்கள் தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பதுடன் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். விவசாயிகள் காலநிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

சந்திராஷ்டமம்: செப். 4, 5.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 24, 30. செப். 3, 6, 12, 15.


பரிகாரம்: சட்டநாதரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar