Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : ஆவணி ராசி பலன் துலாம் : ஆவணி ராசி பலன் துலாம் : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்


வாழ்க்கையை புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் விழிப்புடன் செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகனும் உங்கள் ராசிக்கு விரயாதிபதியுமான சூரியன் விரய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் திடீர் செலவுகளும் எதிர்பாராத பயணமும் ஏற்படும். திட்டமிட்டு செய்கின்ற வேலைகளில்கூட தடைகள் தாமதம் என்ற நிலை உருவாகும். உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. மேல் அதிகாரிகளின் ஆலோசனை இல்லாமல் உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்ட வேலைகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் முதலீட்டில் கவனம் செலுத்துவது அவசியம். சுய தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்றாலும், லாப குருவால் தேவையான வருமானம் வந்து கொண்டிருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கையில் பணப்பழக்கம் இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருபவர்கள் இடைத்தரகர்களை இந்த நேரத்தில் நம்ப வேண்டாம். முயற்சி தாமதம் ஆனாலும் பண இழப்பு ஏற்படாமல் போகும். கலைஞர்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். அரசியல்வாதிகள் தலைமையை அணுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டாலும் பிற்பகுதியில் முன்னேற்றம் இருக்கும்.

சந்திராஷ்டமம்: செப். 1.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 23, 28. செப். 5, 10, 14.


பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


அஸ்தம் 

பிறரின் மனநிலையை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிகளை வழங்கி வந்த சனி வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். உடல்நிலை சீராகும். நண்பர்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகும். உங்கள் சப்தமாதிபதி குரு லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதுடன் 3,5,7 ம் இடங்களையும் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். செப். 3 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் குறையும். வியாபாரம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்க முடியும். சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைய முடியும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பெண்களுக்கு மரியாதையும் பொறுப்பும் கூடும். உடல் நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கவனம் தேவை. சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனைகளை ஏற்பதுடன் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மைகளை ஏற்படுத்தும்.

சந்திராஷ்டமம்: செப். 2.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 23, 29. செப். 5, 11, 14.


பரிகாரம்: அர்த்தநாரீசுவரரை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும்.


சித்திரை 1, 2 ம் பாதம்

தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக் காரகன் ராகுவும், தனக்காரகன் குருவும் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும் என்றாலும், உங்கள் அஷ்டமாதிபதியும் தைரிய வீரிய காரகனுமான செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் சிறு சிறு பிரச்னைகள், சங்கடங்கள் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத பிரச்னைகள், இடமாற்றம் என்று சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும் கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். புதிய பொருள் சேரும் சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாதத்தின் முற்பகுதி செலவுகள் வழியே உங்கள் தேவைகள் பூர்த்தியானாலும் பிற்பகுதியில் வரவு அதிகரிக்கும். உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். நோய் நொடி வம்பு வழக்கு என்ற நிலையெல்லாம் இல்லாமல் போகும். செல்வாக்கு உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் கர்மக்காரகன் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடிகள் இப்போது இல்லாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலையும் நட்பு வட்டத்தில் ஆதரவும் உண்டாகும். பெண்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன் நேரத்திற்கு உறங்குவது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் எண்ணி படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: செப். 3.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 23, 27. செப். 5, 9, 14.


பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar