Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : ஆவணி ராசி பலன் கும்பம் : ஆவணி ராசி பலன் கும்பம் : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம் : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம் : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

மகரம்: உத்திராடம் 2,3,4 ம் பாதம்


குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் அஷ்டமாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் ஞான மோட்சக்காரகன் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் மன நிலையிலும் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியற்ற நிலை இருக்கும். மறைமுகத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். சிலருக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகும். அரசியல்வாதிகளுக்கும் தலைமைக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். உங்கள் வார்த்தைகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ஆக. 31 வரை சாதகமாக இருப்பதால் கையில் பணப்புழக்கம் இருக்கும். வரவேண்டிய பணம் வரும். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலை இருக்கும். எல்லாவற்றையும் நம்மால் சமாளிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வாழத் தொடங்குவீர்கள். சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. முன்பிருந்த நிலையில் இந்த மாதம் மாற்றம் ஏற்படும். எடுத்த வேலைகளில் இழுபறி உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் பல வகையிலும் செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் சேமிப்பை உயர்த்திக் கொள்வதும், பண   விவகாரத்தில் கவனமாக இருப்பதும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு ஆவணி மாதம் யோகமான மாதமாக இருக்கும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னேற்றமாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: செப். 9.10.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 26, 28. செப். 1, 8, 17.


பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட நினைத்தது நிறைவேறும்.


திருவோணம்

முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் நீண்டநாள் கனவுகள் நனவாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். நட்பு வட்டம் விரிவடையும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். துணிச்சலாக சில வேலைகளில் ஈடுபட்டு அதில் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் லாபாதிபதி செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு, மறைமுகத் தொல்லை எல்லாம் விலகும். வழக்கு விவகாரம் ஜெயமாகும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். கையில் பணம் புரளும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவில் உங்கள் செல்வாக்கு இருக்கும். செப். 2 வரை புதன் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காகவும், வீடு கட்டுவதற்காகவும் வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்றாலும், சூரியனும், கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையிலும் சுய ஒழுக்கத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: செப். 10, 11.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 26, 29. செப். 2, 8, 17.


பரிகாரம்: ராமநாதசுவாமியை வழிபட வாழ்வில் இருந்த தடைகள் விலகும்.


அவிட்டம் 1,2 ம் பாதம்

உறுதியாக இருந்து வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரமக் காரகன் செவ்வாய் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் போட்டிகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரனும் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய வாகனம், இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  நிதானம் தேவை. மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு இந்த நேரத்தில் கிடைக்காமல் போகும். அதற்காக வேறு வழிகளில் செல்லாமல் அமைதி காப்பது நன்மையளிக்கும். உங்களைப் பற்றி ஒரு சிலர் அவதூறு பரப்புவதற்கும் வாய்ப்பிருப்பதால் அனைத்து விவகாரத்திலும் கவனமாக இருப்பது உங்கள் கவுரவத்தை பாதுகாக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வார்த்தையில் நிதானம் காப்பதும் பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பதும் இந்த நேரத்தில் மிகவும் அவசியமானது. பெண்கள் குடும்பத்தினரை ஆலோசிக்காமல் எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம். விவசாயிக்கு லாபம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: செப். 11.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 26, 27. செப். 8, 9, 17.


பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar