Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம் : ஆவணி ராசி பலன் மீனம் : ஆவணி ராசி பலன் மீனம் : ஆவணி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கும்பம் : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பம் : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

கும்பம்: அவிட்டம் 3,4 ம் பாதம்


உழைத்து வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பூமி காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தி ஏதேனும் வில்லங்கம் உருவாகலாம். உறவினர்களுக்கும் உங்களுக்கும் இடைவெளி, பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு, அவர்களுடைய செயல்களினால் சங்கடங்கள் என்பதையெல்லாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். சிலர் அவசர செலவிற்காக இடம், வயல் போன்றவற்றை விற்கவும் செய்வீர்கள். சப்தம ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் விரிசல் ஏற்படும். தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் பிரச்னைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். கூட்டுத்தொழிலில் அதிருப்தி ஏற்படும். ராசிநாதன் சனிபகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் வக்கிரமடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கையில் பணம் புரளும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லக்கூடிய நிலை உருவாகும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் விஷயத்திலும் வியாபாரத்தை விரிவு செய்வதிலும் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் பிரச்னைகளை சந்தித்தாலும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதால் நன்மையுண்டாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயத்தில் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: செப். 11, 12.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 26, 27. செப்.8, 9, 17.


பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


சதயம்

உயர்ந்த நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு,  பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் மனதி ஆசை அதிகரிக்கும். புதிய புதிய வேலைகளை எடுத்து அதில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். வருமானத்தின் மீது கவனம் அதிகரிக்கும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது நட்புகள் வழியே சங்கடத்தை ஏற்படுத்துவார். குடும்பத்திற்குள்ளும் நிம்மதியற்ற நிலையை  உண்டாக்குவார். உங்கள் சப்தமாதிபதியும் ஆத்ம காரகனுமான சூரியன் சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செய்துவரும் வியாபாரத்தையும் தொழிலையும் விரிவு செய்வதற்காக சிலர் இடம் மாறுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தனக் காரகன் குரு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் 10,12,2 ம் இடங்களுக்கு கிடைப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும். மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில சஞ்சரிப்பதால் உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். பூர்வீக சொத்திலும் சிலருக்கு பிரச்னைகள் உண்டாகும். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும் என்பதால் கவனமாக செயல்படுவது நன்மையளிக்கும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது அவசியம். பணிபுரியும் இடத்தில் தங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடும் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: செப். 12, 13.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 26, 31. செப். 4, 8, 17.


பரிகாரம்: தில்லை காளியை வழிபட வாழ்வில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.


பூரட்டாதி 1,2,3 ம் பாதம்

பிறருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். தனக்காரகன் குருபகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகளால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும் புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைப்பதுடன் நீண்டநாள் லட்சியமாக இருந்த புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட அச்சம் விலகும். சிலருக்கு நிரந்தர குடியுரிமைக் கிடைக்கும். செப். 3 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் மனதில் இருந்த குழப்பம், வாழ்க்கையில் ஏற்பட்ட பயம் விலகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் பருவநிலை அறிந்து செயல்படுவது அவசியம். முதியவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடனும் உடல் நிலையில் கவனமாகவும் இருப்பது நன்மையளிக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: செப். 13.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 26, 30. செப். 3, 8, 12, 17.


பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar