Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : ஆவணி ராசி பலன் மேஷம்: புரட்டாசி  மாத பலன் மேஷம்: புரட்டாசி மாத பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம் : ஆவணி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம் : ஆவணி ராசி பலன்

பதிவு செய்த நாள்

17 ஆக
2026
01:08

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்: 


நாளை நடப்பதை இன்றே அறியக்கூடிய அளவிற்கு ஆற்றல் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் ராசிநாதன் குரு பகவான், தன்னுடைய 9 ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுநாள் வரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும் சிலருக்கு புதிய பொறுப்பு பதவி தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவும் எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். விளைச்சலில் கவனம் செல்லும் மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவைப்படும்.

சந்திராஷ்டமம்: செப். 14.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 30. செப். 3, 12.


பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறைகள் யாவும் விலகும்.


உத்திரட்டாதி

நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு, மனநிலையில் தோன்றிய குழப்பம், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி யாவும் விலகும் என்றாலும், விரய ஸ்தானத்தில் யோக, போகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வரவை விட செலவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும். அதனால் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது இந்த நேரத்தில் நன்மையை உண்டாக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு பகவான் சஞ்சரிப்பதால் குழந்தைகள் பற்றிய சிந்தனை மேலேங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.  பிள்ளைகள் திருமணம், வேலை வாய்ப்பு என்பதில் அக்கறை அதிகரிக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் கேதுவும் சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் அடங்கி அடங்கி சென்றுக் கொண்டிருந்தவர்களும் வேகமாக செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்ப்பு, போட்டி என்று பயந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். வேலையில் ஏற்பட்ட வழக்கு சாதகமாகும். தடைபட்ட ஊதியம், பதவி உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும் சொந்த இடம் வீடு என்ற நீண்டநாள் கனவு நனவாகும். உங்கள் சப்தமாதிபதி புதன் சஞ்சாரம் செப். 2 வரை சாதகமாக இருப்பதால் கையில் பணம் புரளும். சேமிப்பு உயரும். இந்த நேரத்தில் உங்கள் அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆக. 31 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்கள் மனதில் தடுமாற்றமும் குழப்பம் ஏற்படும். அதனால் குடும்பத்திலும் சங்கடங்கள் தோன்றும். பிரச்னைகள் ஏற்படும் என்பதால், முடிந்த வரை நட்பு வட்டத்தை விட்டு விலகி இருப்பது இந்த நேரத்தில் நன்மைதரும். குடும்ப ரகசியங்களை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், அதனால் குடும்பத்திற்குள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். கலைஞர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகள் செலவிலும் விளைச்சலிலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவதால் எதிர்காலம் பிரகாசமாக மாறும்.

சந்திராஷ்டமம்: ஆக. 18. செப். 14, 15.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 26, 30. செப். 3, 8, 12, 17.


பரிகாரம்: அஷ்டமி திதியில் பைரவரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.


ரேவதி

பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதமாகும். வித்யா காரகன் புதன் செப். 2 வரை ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவு இருக்கும். கையில் பணம் புரளும். அடமானம் வைத்த பத்திரம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்துவரும் வியாபாரம் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். தடைபட்ட பணம்வரும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். கடக ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால், பெரியோர் ஆதரவுடன், செல்வாக்கு அந்தஸ்து எல்லாம் ஏற்படும். நஷ்டத்தில் இயங்கிய தொழிலிலும் லாபம் காண முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். ஞான மோட்சக்காரகன் கேதுவும், ஆறாமிட அதிபதி சூரியனும் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். நீதிமன்ற வழக்கு ஜெயமாகும். நீண்டான முயற்சிகள் நடந்தேறும் என்றாலும், சப்தம ஸ்தானத்தில் ஆக. 31 வரை சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். பெண்கள் குடும்பத்தினர. ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மையாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல்நிலை சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மையளிக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 19. செப். 15, 16.

அதிர்ஷ்ட நாள்: ஆக. 21, 23, 30. செப். 3, 5, 12, 14.


பரிகாரம்: புதன் கிழமையில் மீனாட்சி அம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar