Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: புரட்டாசி மாத ராசிபலன் தனுசு: புரட்டாசி மாத ராசிபலன் தனுசு: புரட்டாசி மாத ராசிபலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
விருச்சிகம்: புரட்டாசி மாத ராசிபலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2026
04:09

விசாகம் 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியுமான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குருபார்வைகளால் நீண்ட நாள் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி தேடிவரும். உயர் கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகள் நனவாகும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். சோர்ந்து கிடந்த உங்களிடம் சுறுசுறுப்பாக செயல்படும் நிலை உருவாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் நிறைவான நிலை காண்பீர்கள்.  உங்கள் ராசிநாதன் செப். 20 முதல் நீச்சம் அடைவதால் செயல்களில் கவனமும், நிதானமும் தேவை. எந்த ஒன்றையும் யோசித்து செயல்படுவது நன்மையாகும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வேலை பார்க்கும் இடத்தில் குடும்ப ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நன்மையளிக்கும். வேலையில் இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தோடு இணைந்து வாழக் கூடிய நிலை உருவாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.


சந்திராஷ்டமம்: அக்.2

அதிர்ஷ்ட நாள்: செப்.18, 21, 27, 30. அக். 3, 9, 12

பரிகாரம்: சட்டநாதரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.


அனுஷம்: உழைப்பால் உயர்வடையும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் முன்னேற்றமான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புரட்டாசி மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் உங்கள் ஜீவனாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்பும், கவுரவமும் கிடைக்கும். மாதம் முழுவதும் உங்கள் சப்தமாதிபதி சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சங்கடம் ஏற்பட்டு விலகும். வெளிநாடு சொல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சுயதேவை பூர்த்தியாகும். சந்தோஷமான நிலை உண்டாகும். பெண்களுக்கு உடல்நிலை ஏற்பட்ட சங்கடம் விலகி ஆரோக்கியமாக செயல்படும் நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவர். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் தேடி வரும். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை உண்டாகும் என்றாலும், வரவு செலவில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். சட்ட விவகாரத்தில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். விவசாயிகள் காற்று, மழை என காலநிலை அறிந்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.


சந்திராஷ்டமம்: அக்.3

அதிர்ஷ்ட நாள்: செப்.18, 26, 27,அக்.8, 9, 17

பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


கேட்டை: எந்த ஒன்றிலும் திட்டமிட்டு வேகமாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். லாப ஸ்தானத்தில் சூரியன், பாக்கிய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்து உங்களுக்கு யோகத்தை உண்டாக்கினாலும், செப்.23 முதல் உங்கள் லாபாதிபதி புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில், கொடுக்கல் வாங்கலில், கையில் பணத்தை எடுத்துச் செல்வதில் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு அதிகரிக்கும். எப்பொழுதும் எச்சரிக்கையாக செயல்படும் நீங்கள், கவர்ச்சியில் மயங்கி, பிறருடைய வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு புதிய முதலீடு செய்து அதன் வழியாக சங்கடத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். தொழிலிலும் விற்பனையாகாத பொருட்களை அதிகமாக கொள்முதல் செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். சந்தை நிலவரம் அறியாமல் உங்கள் செயல்பாடு இருக்கும். பங்குச் சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் கவனக்குறைவால் இழப்பிற்கு ஆளாக வேண்டி வரும். உறவினர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். ராசிநாதன் செவ்வாயும் நீச்சம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவைப்படும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு நிலைபெற்றிருக்கும். மற்றவர்களுக்கு மத்தியில் கவுரவமாகவே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.


சந்திராஷ்டமம்: அக்.4

அதிர்ஷ்ட நாள்: செப்.18, 23, 27. அக். 5, 9, 14

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar