எடுக்கும் முயற்சியில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தைரிய வீரிய பராக்கிரமக் காரகன் செவ்வாய் உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். ஆரோக்கியமாக நடைபோட வைப்பார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பொருளாதார நிலையை உயர்த்துவார். கடந்த மாதத்தில் இருந்த நெருக்கடி, போராட்டம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பெண்களுக்கு வேலைப்பார்க்கும் இடத்திலும் குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பொன் பொருள் சேரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
சந்திராஷ்டமம்: நவ. 24.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 27. டிச. 6, 9, 15.
பரிகாரம்: வைத்தியநாத சுவாமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சுவாதி
திட்டங்கள் தீட்டி அதைநோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு அங்கிருந்து விலகி இருப்பதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும் என்றாலும், வேலை, தொழில் என்று அனைத்திலும் உழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவுகளுடன் ஒரு இடைவெளி ஏற்படும். அதேநேரத்தில் ஞான மோட்சக்காரகன் கேது ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழிலில் வருமானம் கூடும். வருமானத்தின்மீது கவனம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருப்பவருக்கும் கடுமையாக உழைப்பவர்களுக்கும் ஆதாயம் கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் தரும். ருண, ரோக, சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் கர்மக்காரகன் சனி பகவான் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால், எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல்வாதிகள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். உடலில் இருந்த நோய் நொடிகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். பெண்களுக்கு உடல்நிலை சீராகும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு புத்திசாலித்தனம் கூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 24, 25.
அதிர்ஷ்ட நாள்: நவ. 22, டிச. 4, 6, 13, 15.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்
பிறருக்கு வழிகாட்டுவதில் முதன்மையானவராக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதமாகும். தன புத்திர காரகன் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், 3, 5, 7 ம் இடங்களையும் பார்க்கிறார். இதனால் இதுவரை இருந்த நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலையை முடித்து அதில் ஆதாயமும் அடைவீர்கள். தகவல் தொடர்பு துறைகளிலும், பத்திரிகை, யூட்யூப், மீடியா, ஐ.டி தொழில்களில் ஈடுபட்டிருப்போர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கிரியேட்டியர்கள் மதிப்பு உயரும். நீண்டநாளாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கருத்து வேறுபாட்டால் விவாகரத்துவரை சென்றவர்கள்கூட மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராசிநாதனும், உங்கள் பாக்கியாதிபதி புதனும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும் குருவும் கார்த்திகை மாதத்தில் உங்கள் வாழ்வை வளமாக்குவர். மற்றவர் அதிசயக்கத்தக்க வகையில் உங்கள் நிலை உயரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு கூடும். பட்டம் பதவி தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு இந்த மாதம் ஆதாயமான மாதமாக இருக்கும். மாணவர்கள் திறமையாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 25, 26.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 24, 30. டிச. 3, 6, 12, 15.
பரிகாரம்: வேதபுரீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பகிர்கcopied
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »