அறிவாற்றல் மிக்கவரான உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசியாதிபதி செவ்வாயும், உங்கள் ராசிக்கு 2, 5 க்கும் அதிபதியான குரு பகவானும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய நிலை உண்டாகும். காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எடுத்த வேலை வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசுவழியில் ஆதாயம் கூடும். அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு தேடி வரும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். விருப்பம் நிறைவேறும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தையும், சுகம் மற்றும் சத்துரு ஜெய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். சிலருக்கு, சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். பெண்களுக்கு உடல் நிலையிலும் மன நிலையிலும் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட போராட்டநிலை மாறும். விவசாயிகளுக்கு ஆதாயம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: நவ. 26.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 21, 27, 30. டிச. 3, 9, 12.
பரிகாரம்: செந்தில்வேலனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம்
எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் நவ. 30 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால், உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை உண்டாகும். உங்கள் மனம் குழப்பத்திற்கு ஆளாகும் என்றாலும், 3 ம் இடமான தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு, சனி பகவானின் பலத்துடன் சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து முன்னேற்றம் அடையக்கூடிய நிலை உங்களுக்கு உண்டாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். தெய்வ அருளும் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கடன் தொல்லை விலகும். மனதில் இருந்த குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். நவ. 30 முதல் உங்கள் லாபாதிபதி புதன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் பயணம் அதிகரிக்கும். பயணத்தின் வழியே ஆதாயமும் உண்டாகும். இடம் வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை உங்களால் சாதித்துக்கொள்ள முடியும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றத்தையும் உயர்வையும் அடைவர். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு மனதில் இருந்த சங்கடம் விலகும். விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 26, 27.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 18. டிச. 8, 9.
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கேட்டை
விவேகத்துடனும் செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் லாபாதிபதி புதன் மாதத்தின் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். அலைச்சலும் கூடும். உடல்நிலையில் சிலருக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும், உங்கள் ஜீவனாதிபதி சூரியனும் ராசிநாதன் செவ்வாயும் பரிவர்த்தனை அடைவதால் நினைத்ததை சாதிப்பீர்கள். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். சொந்த இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் சப்தமாதிபதியும் விரயாதிபதியுமான சுக்கிரன் விரய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கையில் பணம் புரளும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பயணம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு யோகம் உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி விற்பனையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், உணவகம், மருத்துவம், கெமிக்கல், விவசாயம் தொழில்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்திலும், வேலைப் பார்க்கும் இடத்திலும் மரியாதை கூடும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். நவ. 30 முதல் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் நட்பு ஸ்தானத்திற்கு உண்டாவதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். ஓரடி விலகி இருப்பது நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுப்பதும் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் நன்மை அளிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 27, 28.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, டிச. 5, 9, 14.
பரிகாரம்: வீரராகவ பெருமாளை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
பகிர்கcopied
மேலும்
கார்த்திகை ராசி பலன் (17.11.2026 - 15.12.2026) »