திருமலையில் யுகாதி ஆஸ்தானம்: 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2013 10:04
நகரி: தெலுங்கு வருடப் பிறப்பு தினத்தை ஒட்டி, திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று "யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடந்தது.கோவிலில் காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை தங்க வாசல் முன் தேவஸ்தான ஆஸ்தான பண்டிதர் விஜய புத்தாண்டின் பலன் குறித்து, பஞ்சாங்கம் படித்து பலன் கூறினார். மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர, வழக்கமாக நடக்கும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும், ரத்து செய்யப்பட்டிருந்தன. யுகாதியை ஒட்டி, 70 ஆயிரம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ததாக, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.