பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
மதுரை: சவுராஷ்டிரா மொழியில் எழுதப்பட்ட, "மகாபாரதம் - பாண்டவர் கதை நூல் வெளியீட்டு விழா, மதுரை, தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திரில் நடந்தது. இந்நூலை எழுதியவர், மதுரை கைத்தறி நகர் நெசவுத் தொழிலாளி கஸின் ஆனந்தம், 66. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். எட்டு ஆண்டுகளாக, சவுராஷ்டிரா மொழியில், மகாபாரதத்தை கவிதை நடையில், எழுதி வந்தார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நூல், வெளியீட்டு விழாவிற்கு பேராசிரியர் ரா.மோகன் தலைமை வகித்தார். கீதா நடன கோபால நாயகி மந்திர் தலைவர், சுரேந்திரநாத் முன்னிலை வகித்தார். முதல் பிரதியை, விட்டல்தாஸ் வெளியிட, சவுராஷ்டிரா நலப் பேரவை தலைவர், ஜெயராம் பெற்றுக் கொண்டார்.பேராசிரியர் தா.கு.சுப்ரமணியன், சாகித்ய அகடமி சேதுராமன் உட்பட, பலர் பங்கேற்றனர். ஜெயராமன், தொகுத்து வழங்கினார்.