சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2013 10:05
சுசீந்திரம்:சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இன்று இரவு தெப்ப திருவிழா நடக்கிறது.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றித்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, சிறப்பு வழிபாடு ஆகியன நடந்தது.ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று காலை 9.15 மணிக்கு தேவஸம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர் தேர் வடம் பிடித்து விழாவை துவக்கி வைத்தார். முதலில் விநாயகர் தேரும், அதன் பின்னர் அம்மன் தேரில் சுவாமியும், அம்பாளும், இந்திரன் தேரில் அறம் வளர்த்த அம்மனும் நான்கு ரத வீதி வழியாக பவனி வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்தனர். காலை 12.15 மணிக்கு தேர் அதன் நிலையை வந்தடைந்தது. இரவு 10 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சி நடந்தது.10ம் நாள் விழாவான இன்று இரவு 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் தெப்பத்திற்கு எழுந்தருள்கின்றனர். கோயில் தெப்பக்குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வருகிறது. மூன்றாவது சுற்றின் இறுதியில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 12க்கு திருஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.