பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
சிரமங்களை எதிர்கொள்ளத் தயங்காத சிம்ம ராசி அன்பர்களே!
உங்களுக்கு குரு, சனி,ராகு தொடர்ந்து நன்மை தருவார்கள். இந்த மாதத்தை பொறுத்தவரை சூரியன்,புதன் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் சுக்கிரன் ஜூன்24 வரையும் செவ்வாய் ஜூலை 4க்குப் பிறகும் நன்மை தருவார்கள். உங்கள் முயற்சிகள் நிறைவேறும். பொருளாதார வளத்தால் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு நன்றாக இருக்கும். சொந்தபந்தங்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பெண்கள் உதவிகரமாக இருப்பர்.பணியாளர்களுக்கு இது சிறப்பான காலம். வேலையில் மகிழ்ச்சியும் ஈடுபாடும் ஏற்படும். குறிப்பாக, ஜூலை 4,5,6 தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். வியாபாரிகளுக்கு மாத முற்பகுதி நல்ல முன்னேற்றத்தை தரும் . ஜூன் 24க்கு பிறகு பொருள் நஷ்டம் ஏற்படலாம். அவ்வப்போது சிறுசிறு தடைகள் வரலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பண செழிப்பு இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் மன மகிழ்ச்சியோடு இருப்பர். சிலருக்கு பதவி கிடைக்கவா#ப் புண்டு. விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் தேவையற்ற விரயத்தை தவிர்க்கலாம். புதிய சொத்து வாங்கலாம். மாணவர்கள் நல்ல பலனை காணலாம். பெரும்பாலானோருக்கு தேர்வு முடிவுகள் சிறப்பாக அமையும். பெண்கள் பிள்ளைகளால் முன்னேற்றம் காணலாம். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். பயணத்தின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,9. நிறம்: செந்தூரம், பச்சை.
நல்ல நாட்கள்: ஜூன்15,16, 19,20, 25,26,27,28,29, ஜூலை 4,5,6,7,8, 12,13,16.
கவன நாட்கள்: ஜூன்30, ஜூலை1
வழிபாடு: மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.