பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
கடமையில் கண்ணாய் இருக்கும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன்,புதன் 10-ம் இடத்தில் இருந்து நற்பலனை கொடுப்பார்கள். ஜூன் 24ல் சுக்கிரன் இடம்மாறி நன்மை தருவார். மற்றைய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் பாதகம் ஏதும் இல்லை. குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றி காணலாம்.நினைத்த காரியம் நிறைவேறும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் அகலும். முக்கிய பொறுப்புகளை பெண்கள் வசம் ஒப்படைப்பது சிறப்பைத் தரும். பெண்களின் ஆதரவு உண்டு. அவர்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். பணவரவு நன்றாக இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். குறிப்பாக ஜூலை 7,8ல் சிறப்பான பலனைக் காணலாம். வியாபாரிகளுக்கு 10ம் தேதி வரை எதிரி தொல்லை ஏற்படும். 13,14,15ம் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 28,29,32ம் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். கலைஞர்கள் மனமகிழ்ச்சியோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த முன்னேற்றங்களை காணலாம். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். ஆசிரியர்களின் உதவியை கேட்டுப் பெறுவது மேலும் சிறப்பைத் தரும். விவசாயிகளுக்கு பழவகைகள், கிழங்கு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களால் குடும்பம் சிறப்படையும. புத்தாடை அணிகலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உஷ்ண, பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 3,7. நிறம்: செந்தூரம்,பச்சை.
நல்ல நாட்கள்: ஜூன் 17,18, 21,22, 27,28,29,30, ஜூலை1, 7,8,9,10,11, 14,15.
கவன நாட்கள்: ஜூலை2,3.
வழிபாடு: வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை படைத்து வணங்கலாம். சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவிசெய்யுங்கள்.