பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
எதிலும் முதன்மையை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!
இம்மாதம் சீரான பலனை காணலாம். குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. சுக்கிரன் ஆகஸ்ட் 12ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் சாதகமாக இருக்கும். செவ்வாயும் நற்பலனை கொடுப்பார். புதன் ஜூலை30ல் சாதக நிலைக்கு வருகிறார். செவ்வாயால் பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆகஸ்ட் 3,4,5ல் புத்தாடை அணிகலன்கள் கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும்.பணியாளர்கள் முன்னேற்றம் காணலாம். தொழில், வியாபாரத்தில் மனநிம்மதி இருப்பதால் நல்ல முறையில் கவனம் செலுத்தி கூடுதல் வருமானம் காணலாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். ஜூலை30 வரை அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜூலை29,30,31ல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஜூலை27, 28, ஆகஸ்ட்1,2ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஆகஸ்ட் 15க்கு பிறகுதொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று வசதிகளுடன் வாழ்வர். நற்பெயர் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் காணப்படுவர். ஆகஸ்ட் 12க்குப் பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். மாணவர்கள் முன்னேற்றம் காணலாம். அதிக சிரத்தை எடுத்து படித்தால் அதிக மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். நவீன யுக்தியை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்தலாம். பழ, பயறு வகைகளில் அதிக மகசூல் பெறலாம். பெண்கள் நற்பெயர் பெறுவர்.
நல்ல நாட்கள்: ஜூலை17, 23,24,25,26,29,30, 31,ஆகஸ்ட் 3,4,5,10,11,12,13,14
கவன நாட்கள்: ஜூலை18,19,20, ஆகஸ்ட் 15,16 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: சிவப்பு, வெள்ளை
வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காலையில் சூரியதரிசனம் செய்யுங்கள்.