பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
12:07
அறிவுப்பூர்வமான எண்ணம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் கடகத்தில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். மற்ற கிரகங்களில் 12ல் உள்ள சனி,ராகு, 3ல் இருக்கும் குரு தொடர்ந்து நன்மை தருவார்கள். சுக்கிரன் ஜூலை 18ல் சிம்மத்திற்கு மாறினாலும், மாதம் முழுவதும் நன்மை தருவார். கடந்த மாதம் சூரியனால் இருந்துவந்த வீண்விரயம் இனி இருக்காது. சேமிப்பு அதிகரிக்கும். புதன் ஜூலை 30 வரை 2-ம் இடத்தில் இருப்பதால் சிலர் வீண் அவப்பெயருக்கு ஆளாகலாம்.குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். ஜூலை18,19,20. ஆகஸ்ட் 15,16ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஆகஸ்ட் 6,7ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். ஆகஸ்ட் 12க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். ஜூலை 23,24, ஆகஸ்ட் 10,11,12ல்உடல்நலனில் சற்றுஅக்கறையுடன்இருக்கவும். பணியாளர்களுக்கு பணியிடத்தில்செல்வாக்கு அதிகரிக்கும். ஜூலை25,26 தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. மாதஇறுதியில் சக ஊழியர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் பொருள் களவு போக வாய்ப்புண்டு. ஜூலை 29,30,31, ஆகஸ்ட் 3,4,5ல் சந்திரனால் தடைகள் வரலாம். அதே நேரம் ஆகஸ்ட்1,2ல் எதிர்பாராத பணம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். விவசாயிகள் பழம், பயறு வகை, எள் கரும்பு பயிர்கள் மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பது அரிது.பெண்கள் குதூகலமாக இருப்பர். ஜூலை18க்கு பிறகு புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.
நல்ல நாட்கள்: ஜூலை 17,18,19,20, 25,26,27,28, ஆகஸ்ட்1,2,7,8,13,14,15,16.
கவன நாட்கள்: ஜூலை 21,22 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்கள்: 3,4,7. நிறம்: செந்தூரம்,மஞ்சள், நீலம்
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாயன்று துர்க்கை, முருகனை வழிபடுங்கள். ஏழைகளுக்கு துவரம்பருப்பு தானம் செய்யுங்கள்.