பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
05:06
என்ன நடந்தாலும் கலங்காத மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம், சனி, குரு உள்ளிட்ட முக்கிய கிரகங்கள் சாதகமாகக் காணப்படவில்லை. புதன் மாதம் முழுவதும் நன்மை தருவார். ஜூன்24ல் சுக்கிரன் இடம் மாறிய பிறகு நன்மை தருவார். செவ்வாய் ஜூலை 4 வரை நன்மை செய்வார். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக அமையும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண்செலவு வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வசதிகள் சீராக இருக்கும். தம்பதி இடையே அன்பு பெருகும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். ஜூன்24க்கு பிறகுபெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். ஜூன் 26,27, 28, ஜூலை1,2 தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஜூன்21, 22,23 தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலை சீராக நடக்கும். உழைப்புக்கு ஏற்ற சம்பள உயர்வு கிடைக்காமல் போகாது. பெண்களிடம் விரோதம் ஏற்படும் அனுசரித்து போகவும். ஜூன் 23,24ல் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு லாபத்திற்கு குறை இருக்காது. நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஜூன் 15,16, ஜூலை 13,14 தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம்.விவசாயிகள் அதிக முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது. பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். புத்தாடை, அணிகலன் கிடைக்க பெறலாம். உடல்நலம் மாத முற்பகுதியில் சிறப்படையும். ஜூலை4க்கு பிறகு வயிறு பிரச்னை வரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6. நிறம்: பச்சை,வெள்ளை.
நல்ல நாட்கள்: ஜூன் 15,16,17,18, 23, 24,25,26, 30, ஜூலை1, 4,5,6, 12,13,14,15.
கவன நாட்கள்: ஜூன் 19, 20, ஜூலை 16.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுங்கள். காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். சிவன் மற்றும் பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.